You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை திருப்பி அனுப்பியது வட கொரியா
கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை என்று நம்பப்படும் பொருட்களை வட கொரிய திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சமீபத்திய ராஜதந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
எஞ்சியவற்றை எடுத்த சென்ற விமானம் தென் கொரியாவில் உள்ள அமெரிக்க விமான தளத்தில் தரையிறங்கிய போது, துருப்புகளின் மரியாதையோடு வரவேற்கப்பட்டது.
தங்கள் அன்புக்குரியவர்களின் எஞ்சிய பொருட்களை பெற அவர்களது உறவினர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த டிரம்ப்-கிம் உச்சிமாநாட்டின் போது, இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
முன்னதாக போடப்பட்ட உடன்படிக்கையின்படி, துருப்புகளின் எஞ்சிய பொருட்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கையெழுத்திடப்பட்டது.
வட கொரியாவில் எப்படி அமெரிக்க துருப்புகள்?
கம்யூனிஸ ஆட்சியான வட கொரியாவுக்கு எதிராக தென் கொரிய மற்றும் ஐ.நா கூட்டணிகளுடன் சேர்ந்து 3 லட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் சண்டையிட்டனர்.
அதில் பலர் கணக்கில் வரவில்லை என்றாலும், தற்போது வட கொரியாவாக இருக்கும் பகுதிகளில் சுமார் 5,300 பேர் காணாமல் போயுள்ளனர்.
எங்கெல்லாம் துருப்புகளின் எஞ்சியவை உள்ளதாக நம்பப்படுகிறது?
- தற்காலிக ஐ.நா ராணுவ கல்லறைகள்
- போர் முகாம்களில் கைதிகளாக இருந்த பலர், 1950ஆம் ஆண்டு குளிர்காலத்தில் உயிரிழந்தனர்.
- முக்கிய போர் நடச்த பகுதிகள் - உன்சன் மற்றும் சொங்சன் போன்ற பகுதிகளில் சுமார் 1,600 பேர் உயிரிழந்தனர்.
- வட மற்றும் தென் கொரியாவை பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில் 1000 பேரின் உடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
தற்போது என்ன நடக்கும்?
துருப்புகளின் எஞ்சிய பொருட்கள் மற்றும் உடல்கூறுகள், அமெரிக்காவில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவை அனைத்தும் தகுந்த மரியாதையுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்