You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஜப்பானின் ஆக்டோபஸ் கொல்லப்பட்டது ஏன்?
உலக கோப்பை கால்பந்து 2018-ல் ஜப்பான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் சரியாக கணித்த ஆக்டோபஸ் ஒன்று கொல்லப்பட்டு உணவானது.
ரபியோ எனப்பெயரிடப்பட்ட ஆக்டோபஸ் ஒன்று Paddling Pool எனப்படும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் செயற்கை குளம் போன்ற ஒன்றில் விடப்பட்டு சோதிக்கபட்டது. மூன்று போட்டிகளிலும் ஆக்டோபஸ் சரியாக கணித்தது.
ரபியோவை பிடித்த மீனவர் கிமியோ அபே, அந்த ஆக்டோபஸை ஞானதிருஷ்டிக்காக பயன்படுத்துவதை விட உணவுக்காக விற்று நிறைய பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.
வைரலாவதன் மூலம் கிடைக்கும் புகழைவிட தனது வாழ்வாதாரமே முக்கியம் என கருதி ஆக்டோபஸை கொல்ல கிமியோ முடிவு செய்தார் என ஜப்பான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரபியோ எப்படிச் செயல்பட்டது என தெரிந்துக் கொள்ள இந்த காணொளி உங்களுக்கு உதவக்கூடும்.
பசிபிக் கடலைச் சேர்ந்த ஒரு பெரிய ஆக்டோபஸான ரபியோ, கொலம்பியாவுக்கு எதிராக ஜப்பான் வெற்றி பெறும் என்பதை சரியாக கணித்தது. மேலும் ஜப்பான் செனெகலுக்கு இடையிலான ஒரு போட்டி டிராவில் முடிவடையும் என்பதை பேடிலிங் குளத்தின் வெவ்வேறு பகுதிக்கு நகர்வதன் மூலம் கணித்தது.
ஆக்டோபஸ் எப்படி கணித்தது?
வெற்றி, தோல்வி மற்றும் டிரா ஆகியவை குளத்தின் வெவ்வேறு பகுதிகளில் குறிக்கப்பட்டது. ஆக்டோபஸை ஈர்ப்பதற்காக குளத்தில் உணவு வைக்கப்பட்டது. ஆக்டோபஸ் எந்த பக்கம் நகர்கிறது என்பதை பொறுத்து அதன் கணிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆக்டொபஸை பிடித்த மீனவர் கிமியோ இனி வரும் போட்டிகளின் முடிவை கணிக்க வேறொரு ஆக்டோபஸை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
போலாந்துக்கு எதிராக ஜப்பான் தோல்வியடையும் என்பதையும் இந்த ஆக்டோபஸ் கணித்திருந்தது. ஜப்பான் - போலந்து போட்டி நடப்பதற்கு முன்னதாக ரபியோ சந்தைக்கு அனுப்பப்பட்டது .
உலககோப்பை போட்டிகளை கணித்த முதல் வினோத ஆக்டொபஸ் இதுவல்ல. 2010-ல் பால் எனும் ஒரு ஜெர்மனிய ஆக்டோபஸ் ஆறு உலக கோப்பை போட்டிகளில் சரியாக முடிவுகளை கணித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்