'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர்

கிரேஸ் ஹாப்பர்:

அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அட்மிரல் கிரேஸ், இரண்டாம் உலகப்போரின் போது, மார்க்-1 என்ற கணினியின் மேம்பாட்டு பணிக்கான ஆய்வின் இடம்பெற்றிருந்தார்.

ஆங்கிலத்தைப் போலவே, கணினியில் பயன்படுத்தப்படும் நிரல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர் ஆய்வின் விளைவாக, அவர் தலைமையிலான குழு, பிரபல கணினி மொழியான COBOL-க்கு முந்தைய, கணினி நிரல் மொழிக்கான தொகுப்பியை கண்டறிந்தனர்.

நான்சி ஜான்சன்:

நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களை திடமாக வைத்துக்கொள்ள பலரும் கனரக இயந்திரங்களையும் வண்டிகளையும் பயன்படுத்திவந்த காலத்தில், கைகளில் தூக்கிச்செல்லும் அளவிலான இயந்திரத்தை தயாரித்தார் நான்சி ஜான்சன்.

1843ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இயந்திரம் இன்றும் மேற்கத்திய நாடுகளில் வீடுகளிலேயே ஐஸ்கிரீம்கள் செய்ய பெரும் உதவியாக உள்ளது. இதற்கான காப்புரிமையை அவர் 1843இல் பெற்றார்.

மேரி வான் பிரிட்டான் பிரவுண்:

நம்மை 24x7மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி உருவாவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை வீட்டின் பாதுகாப்புகளுக்கான பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள்.

அமெரிக்காவில் செவிலியராக பணியாற்றிவந்த மேரி விட்டில் தனியாக இருப்பதை அசௌகர்யமாக கருதினார். தனது கணவருடன் இணைந்து வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கண்காணிப்பு முறையை கண்டறிந்தார்.

1966இல் அவர் கண்டறிந்த இந்த முறையில் வீட்டின் வாசலை கண்காணிக்கும் கேமராக்கள் இருந்தன. வாசலில் நிற்பவரின் முகத்தை வீட்டினுள்ளே இருந்து பார்ப்பதற்கான இந்த கேமராக்களை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் இணைத்து பயன்படுத்திய மேரி, ஆபத்து காலங்களில் காவல்துறைக்கு தகவல் அளிக்க ஒரு `அவசர பொத்தான்` வைத்திருந்தார்.

ஹேடி லமார்:

ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த ஹேடி லமார் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் தனது பணியை செய்து வந்தார். இரண்டாம் உலகப்போரின்போது, `டொர்பிடோ` என்று அழைக்கப்பட்ட ஆயுதங்கள் ரேடியோ அலைவரிசைகள் மூலம் இயங்கின.

இந்த ரேடியோ அலைவரிசைகள் எளிதில் கண்டறியப்படுபவை என்பதால், அவற்றை வேறு திசைகளுக்கு மாற்றி அனுப்பும் வாய்ப்புகள் இருந்தன.

இந்த சூழலை தடுக்க, ஹேடி தனது நண்பருடன் இணைந்து புதிய முறையை கண்டறிந்தனர். ரோடியோ அலைவரிசையுடன் ஒரு தானாக இசைக்கும் பியானோ இசையையும் அவர்கள் சேர்த்து வடிவமைத்தனர். இது `frequency hopping` என்று அழைக்கப்பட்டது.

இதே முறையை மேம்படுத்தும் வகையில் அவர்கள் ` spread-spectrum' என்ற ஆய்வில் பங்கேற்றனர். பிற்காலத்தில் புளூடூத் மற்றும் வை-ஃபை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு இந்த ஆய்வு பெரும் பங்களித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :