You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண்
அமெரிக்காவின் பிரபலமான கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2013- 2017 ஆம் ஆண்டு வரை ஜெனரல் மோட்டார்ஸின் சி.இ.ஓவாக இவர் பணியாற்றி வந்தார். தனியார் துறையில், அதுவும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் பெண்களுக்கு பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படுவது குறைவாகவே உள்ளது.
தற்போது அந்த பொறுப்பில் இருக்கும் சக் ஸ்டீவன்ஸ் வரும் செம்படம்பர் மாதம் ஓய்வு பெறும் நிலையில், திவ்யா தலைமை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் இவ்வளவு பெரிய பொறுப்பில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
- 39 வயதான திவ்யா சென்னையில் பிறந்தவர்.
- சென்னை பல்கலைகழகத்தில் காமர்ஸ் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற திவ்யா, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்தார்.
- ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் திவ்யா.
- ஜூலை 2017 முதல் பெருநிறுவன நிதி பிரிவில் துணை தலைவராக அவர் பொறுப்பேற்று கொண்டார்.
- தற்போது பணியில் உள்ள சக் ஸ்டீவன்ஸ் ஓய்வு பெற்ற பிறகு, செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து தலைமை நிதி அதிகாரியாக திவ்யா பொறுப்பேற்று கொள்வார்.
- நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகளில் திவ்யாவின் அனுபவம் மற்றும் தலைமை பண்புகள் முக்கிய பங்காற்றியதாகவும், கடந்த சில ஆண்டுகளில் தங்கள் நிறுவனம் பெற்ற வலுவான வர்த்தக முடிவுகள் சிறப்பாக இருந்ததாகவும் ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இந்தியர் நியமிக்கப்படுவதும் ஒரு பெண் நியமிக்கப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.
- இந்நிறுவனத்தில் தலைவராக உள்ள மேரி பாரா, திவ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறையில் இத்தகைய உயர்பதவிகளை பெற்றுள்ளது இந்த இரண்டு பெண்கள்தான்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த திவ்யா, தன் பெரும்பாலான பாலிய நாட்கள் சென்னையில் கழித்ததாக கூறியிருக்கிறார். எதுவும் கிடைப்பது எளிதில்லை என்றும் கடினமாக உழைத்தால் மட்டுமே நாம் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்