You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் - கிம் உச்சிமாநாடு: 4 முக்கிய பிரகடனங்கள்
சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், அமெரிக்கா - கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புதிய உறவை ஏற்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை நிலைநாட்டவும், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே விரிவான, ஆழமான கருத்து பரிமாற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.
- கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.
- ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.
- அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன
பிற செய்திகள்:
- LIVE: டிரம்ப் - கிம் சந்திப்பு: அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வட கொரியா உறுதி
- மூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி?
- சிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)
- சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா
- கிம் ஜோங் - உன்னை தேடிய தென் கொரியா மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்