சிரியா ரசாயன தாக்குதல்: அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவில் ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என ரஷ்யா அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

சிரியா ரசாயன தாக்குதல்: அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

தற்போது நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன் என ரஷ்யாவின் ஐ.நா.,தூதர் வசிலி நபியென்சியா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காதான் பொறுப்பு

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி - வசிலி நபியென்சியா

ஏதேனும் சட்டவிரோத ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கினால், அதன் விளைவுகளுக்கு அந்நாடுதான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது ரஷ்யா. ஆனால் டூமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு பதில் தாக்குதலும் சிரியா அரசின் ரசாயன தொழிற்சாலைகள் மீது நடத்தப்படும் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

வீட்டோ அதிகாரம்

அமெரிக்காவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள்.

இப்பிரச்சனையில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையை தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு நிராகரித்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இது தொடர்பாக ரஷ்யா முன்மொழிந்த வரைவுக்கும் போதிய ஆதரவு கிட்டவில்லை.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டூமா பகுதியில் சந்தேகிக்கும் விதமாக ரசாயன தாக்குதல் நடத்திய சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க முன்மொழிந்தது.

மறுக்கும் சிரியா

ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆதரவை பெறும் சிரியா, ரசாயன தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

டூமாவில் தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு ஆட்களை நிறுத்தப் போகிறது.

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, சிரியா மீதான ரசாயன தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் வார்த்தை போரில் ஈடுப்பட்டன. சிரியா டூமா மீது ரசாயன தாக்குதல் தொடுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல என்றும், அதற்கு அமெரிக்கா காட்டும் ராணுவ எதிர்வினைக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யாவின் பிரதிநிதி வசிலி நபியென்சியா கூறினார். அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி சிரியா ராணுவத்துக்கு உதவும் ரஷ்யாவின் கரங்களில் சிரியா குழந்தைகளின் குருதி படிந்துள்ளது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: