உளவாளி மீதான தாக்குதல் சர்ச்சை: 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா
பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
ஜெர்மனியும் பிரான்சும் தலா நான்கு ரஷ்ய ராஜிய அதிகாரிகளை வெளியேற்றவிருப்பதாக அறிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிற ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ளன.
பிரிட்டனில் நடத்தப்பட்ட முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நச்சுத்தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் பங்கு இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருந்ததை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கடந்த வாரம் ஒப்புக் கொண்டனர்.

பட மூலாதாரம், AFP
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, சியாட்டிலில் உள்ல ரஷ்ய தூதரகத்தை மூடவும் அமெரிக்கா உத்தரவிட இருக்கிறது.
அமெரிக்காவில், ரஷ்யாவின் 48 ராஜீய அதிகாரிகள் ரஷ்ய தூதரகத்திலும், மற்றவர்கள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








