You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு
உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அதில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசார குழு கூறுகிறது.
ஆக்ஷன் ஆன் சால்ட் எனும் இந்த அமைப்பு 150 க்கும் மேற்பட்ட உணவுகள் பகுப்பாய்வு செய்தது. அந்த உணவுகளில் பதின் வயதினருக்குத் தினசரி அனுமதித்த 6 கிராம் அளவில், பாதி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
முட்டை ப்ரைடு ரைஸில் கூடுதலாக 5.3 கிராம் உப்பு இருக்கிறது.
சைடு டிஷ் மற்றும் நனைத்த சுவையூட்டிகளை சேர்த்துச் சாப்பிட்டால், கூடுதலாக 4 கிராம் உப்பை ஒருவர் சேர்த்துக்கொள்ள நேரிடும் என கண்டுபிடிப்பு கூறுகிறது.
சில உணவுகள் 2 கிராமை விட குறைவான உப்பை கொண்டுள்ளது.
காய்கறி ஸ்பிரிங் ரோலில் 0.8 கிராம் முதல் 1.4கிராம் வரை அளவிலான உப்பு உள்ளது.
சாஸ் அரிசி மற்றும் நூடுல்ஸ் வகையான உணவுகளில், உப்பின் அளவு சிறிதளவு அதிகமாக உள்ளது.
சோயா சார்ஸ், சில்லி சார்ஸ் போன்ற சார்ஸ் வகைகளிலும், உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது.
141 உணவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், 43% உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தது. அப்படி என்றால் அதன் பேக்கின் மேலே சிவப்பு அறிவிப்பு முத்திரை இடம் பெற வேண்டும்.
அதிக உப்பு ரத்த அழுத்தத்தை உயர்த்தலாம், இது இதய நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் ஏற்பனவே உப்பு உள்ளது. அத்துடன் நாம் தனியாக உப்பு சேர்த்துக்கொள்கிறோம்.
உணவில் உப்பு அளவு குறைக்க இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, உணவுதுறைகளை ஊக்குவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்