You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப்பார்வை: சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதில் பின்னடைவு
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
உதவிகளை வழங்குவதில் பின்னடைவு
சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் அவசர உதவிகளை வழங்கச் சென்ற ஐ,நாவின் உதவி வாகன தொடர்வண்டி, பொருட்களை முழுவதுமாக வழங்காமல் திரும்பி வந்துள்ளது.
முடிந்தவரை உதவிகளை விநியோகித்து ஒன்பது மணி நேரங்களுக்கு பிறகே அவ்விடத்தை விட்டுச் சென்றதாக ஐ.நா., அகதிகள் முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு சென்ற 40க்கும் அதிகமான டிரக்குகளில் 10டிரக்குகளின் பொருட்கள் கூட விநியோகிக்கப்படவில்லை என ஐ.நா., அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் ரஷிய உளவாளி
முன்னாள் ரஷிய உளவாளி என்று கருதப்படும் நபர் ஒருவர், அடையாளம் தெரியாத பொருளால் மயக்கமடைந்து பிரிட்டன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிறன்று, வணிக வளாகம் ஒன்றிற்கு வெளியே மேசை மேல், பெண் ஒருவருடன் மயக்கமான நிலையில் கடந்தார் அவர். நாட்டின் ரகசியங்களை பிரிட்டனின் உளவுத்துறைக்கு கசியவிட்டதாக அவர் ரஷிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திருட்டுப் போன ஆஸ்கார்
நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை பெற்ற பிரான்செஸ் மெக்டோர்மாண்டின், விருதை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
47 வயதாகும் டெர்ரி பிரையண்ட் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் பிணை வழங்கப்பட்டது.
பின்னர் ஆஸ்கார் விருது மீண்டும் மெக்டோர்மாண்டிடம் ஒப்படைக்கப்பட்டது
குறைந்துள்ளது குழந்தை திருமணம்
உலகளவில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து வருடங்களில் 25 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெண் கல்வி மூலம் இது சாத்தியிமாகியுள்ளது என்றும், மேலும் குழந்தை திருமணங்களால் வரும் தீங்கு குறித்து தனிநபர்கள், குடும்பங்கள், மற்றும் சமூகங்கள் இடையே ஏற்படுத்திய விழிப்புணர்வே இதற்கு காரணம் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
நட்புறவை விரும்பும் வட கொரியா
தென் கொரியாவுடன் "தேசிய மறு இணைப்பு என்னும் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திங்களன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் கிம் ஜாங் உன்.
2011ஆம் ஆண்டு அவர் பதவியேற்ற பிறகு தென் கொரிய பிரதிநிதிகள் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
தென் கொரியாவின் பியாங்சேங்கில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இரு நாடுகளுக்குமான உறவில் சற்று இணக்கம் காணப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்