உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது'

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது'

சிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர்

ரசாயன ஆயுதங்களாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ள உபகரணங்களை வடகொரியா சிரியாவுக்கு அனுப்பியுள்ளதாக, இன்னும் வெளியிடப்படாத ஐ.நா அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா தனது ஏவுகணை தயாரிப்பு வல்லுநர்களையும் சிரியாவில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அனுப்பியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

'மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதை தடுக்க முடியாது'

சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க-மெக்சிக எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி கொன்சாலோ கியூரியல் என்பவர் தள்ளுபடி செய்துள்ளார்.

மெக்சிகோ எல்லை சுவர்

பட மூலாதாரம், Reuters

நீதிபதி கொன்சாலோ கியூரியல் மெக்சிகோவை பூர்விகமாகக் கொண்டவர் என்பதால் அவர் பாகுபாட்டுடன் நடந்துகொள்வார் என்று டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் சட்டப்பூர்வ அதிகரித்திற்குள்தான் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டம் உள்ளதாக கொன்சாலோ தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Presentational grey line

நைல் நதியை விமர்சித்த பாடகிக்கு சிறை

நைல் நதியின் தூய்மை குறித்து விமர்சனம் செய்த எகிப்து நாட்டின் பிரபல பாடகி ஷெரின் அப்தல் வகாப் என்பவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷெரின் அப்தல் வகாப்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஷெரின் அப்தல் வகாப்

நைல் நதியின் நீரைக் குடித்தால் தொற்று நோய் ஏற்படலாம் என்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

Presentational grey line

குளிரில் நடுங்கும் ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் உறைய வைக்கும் கடும் குளிர் வேகமாக பரவி வருவதால், பல இடங்களும் வெள்ளை நிறப் பனியால் போர்த்தப்பட்டதுபோல காட்சியளிக்கிறன.

Beast from the East

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இத்தாலியில் நிலவும் கடும் குளிர்

'பீஸ்ட் ஃபிரம் தி ஈஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பனி மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையாக உள்ளது. இந்தக் குளிரால் இதுவரை குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: