இங்கிலாந்து மக்கள் கே.எஃப்.சி சிக்கனுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள்?

சிக்கன் பற்றாக்குறையால் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக கடந்த வாரம் மூடப்பட்டன.

கடந்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை, 575 கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த இடர்பாடு கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது.

இந்த இடர்பாடு, லண்டன் மக்களின் உணவு பழக்கம் குறித்தும், அந்த மக்கள் கே.எஃப்.சி சிக்கன் உட்பட பிற சிக்கன் கடைகளில் எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்தும் ஒரு புரிதலை உண்டாக்கி இருக்கிறது.

இவ்வளவு தொகையா...!?

2017 ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்து மக்கள் 2.70 பில்லியன் அமெரிக்க டாலர்கள், கே.எஃப்.சி, பேர்ட் மற்றும் சிக் அண்ட் சோர்ஸ் ஆகிய கடைகளில் செலவிட்டு இருக்கிறார்கள்.

இந்த விற்பனை, 2022 ஆம் ஆண்டு, 3.20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரலாம் என ரீடைல் ரிசர்ச்சர்ஸ் மிண்டலின் ஆய்வு கூறுகிறது.

இங்கிலாந்து மக்கள் பர்கரைதான் அதிகம் விரும்புகிறார்கள். 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் - ஜூன் மாதங்கள் இடையிலான காலக்கட்டத்தில் 60 சதவீத பிரிட்டன் மக்கள் பர்கர் உணவகங்களில் உணவு அருந்தி இருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் சிக்கன் கடைகளில் உணவு அருந்தியவர்கள் 47 சதவீதம் தான்.

இந்தியாவில் `புகையிலை` இங்கிலாந்தில் `துரித உணவு`

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை, சிகரெட் விற்கக் கூடாது என்ற தடை உள்ளது போல, லண்டனில் பள்ளிகள் அருகில் துரித உணவகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

லண்டன் மேயர் சாதிக் கான், 2017 ஆம் ஆண்டு, "இனி பள்ளிகள் அருகே அதாவது 400 மீட்டர் தூரம் வரை, துரித உணவகங்கள் திறக்க அனுமதி தர முடியாது" என்று அறிவித்து இருந்தார்.

சிறுவயது உடல் பருமனை எதிர்கொள்வது தொடர்பாக இந்த அறிவிப்பு அங்கு வெளியிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :