You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோடின் குறைபாடு உங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏன்?
அயோடின் நம் உடல்நலத்திற்கு இன்றியமையாதது. ஆனாலும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் மிகவும் அறியாமலே இருக்கிறோம்.
நமது வளர்சிதை ஒழுங்குமுறைக்கான முக்கிய பொறுப்பு அயோடினிடம் உள்ளது. அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலோனோருக்கு எவ்வளவு அயோடின் தேவை அல்லது எங்கிருந்து அது வருகிறது என்பது தெரியாது
பல நவீன 'ஆரோக்கியமான உணவுகளில்' அயோடின் குறைபாடு உள்ளது என்பதும், இது கர்ப்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதும் சர்ரே பல்கலைக்கழகம் ஊட்டச்சத்து மருத்துவ பேராசிரியர் மார்கரெட் ரேமன் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அயோடின் ஏன் தேவை?
தைராய்டு ஹார்மோன்களுக்கான முக்கிய அங்கமாகவும், வளர்ச்சிக்கும், வளர்சிதைக்கும் முக்கியமானதாக உள்ளது. மூளையின் வளர்ச்சிக்காகவும், குறிப்பாகக் கருப்பையில் குழந்தைக்கு மிகவும் அவசியமானதாகவும் இது உள்ளது.
''கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அயோடினைப் பெறவில்லை என்றால், அவர்களது குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கலாம்'' என ரேமன் கூறுகிறார்.
''கற்றல் குறைபாட்டை உண்டாக்கும், தடுக்கக் கூடிய காரணிகளில் முதன்மையானதாக அயோடின் குறைபாடே உள்ளது'' எம்கிறார் பேராசிரியர் மார்கரெட் ரேமன்.
உலகில் அயோடினை கொண்டிருக்கும் சிறந்த உணவாக வெள்ளை மீனும் முட்டையும் உள்ளது. பெரும்பாலான நாடுகள் உப்பு மூலம் அயோடினை எடுத்துக்கொள்கின்றன. பிரிட்டன் போன்ற வேறு சில நாடுகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்கள் மூலம் அயோடினை பெறுகின்றன.
ஆனாலும் தொழில்மயமான உலகில், அயோடின் குறைபாடு பொதுவான பிரச்சனைகளாக மாறிவிட்டன. அயோடின் நிறைந்த உணவுகள் கிடைக்காததால் இது ஏற்படுவதில்லை. மக்கள் தாங்கள் உண்பதற்காக தேர்ந்தேடுக்கும் உணவுகளால் இப்பிரச்சனை ஏற்பட்டது.
நார்வே பொது சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், அனைத்து வயது, பாலினம் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பால் மற்றும் முட்டை சாப்பிடும் சைவர்களிடமும், முட்டைப் பால் கூட உண்ணாத சைவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பின்னவர்களுக்கே அயோடின் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என கண்டறியப்பட்டது.
சைவ உணவு மட்டும் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராய்டு வீக்கப் பிரச்சனையும், அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்த தைராய்டு செயல்பாடும் இருக்கும் என பேராசிரியர் மார்கரெட் ரேமனின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
அத்துடன் அயோடின் குறைபாட்டால், குழந்தைகள் குறைவான ஐக்யூ( IQ) மற்றும் கற்றல் திறன் கொண்டிருக்கும் நீண்ட கால பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
எவ்வளவு அயோடின் எடுத்துக்கொள்ள வேண்டும்?
பெண்கள் நான் ஒன்றுக்கும் 150-300 மைக்ரோ கிராமும், ஆண்கள் 150 மைக்ரோ கிராமும் எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
உணவுக்கு உணவு அயோடின் அளவு வேறுபடுகிறது. எவ்வளவு உணவு சாப்பிட்டால், இந்த நிலையை அடைய முடிவும் என கூறுவது கடினம்.
ஆரோக்கியமாக இருப்பதற்குச் சிறந்த வழி, பல்வேறு உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :