You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குளிர்கால ஒலிம்பிக்: 'ஒரே கொடி' அணிவகுப்பின் கீழ் வட, தென் கொரியா
இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டில் கலந்துகொள்ளவும் அமைதி கிரமமான பான்முன்ஜாமில் சந்தித்த அதிகாரிகள் இசைந்துள்ளனர்.
முன்னதாக. இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின்போது உற்சாகமூட்டுவதற்காக 230 பேரை அனுப்ப வட கொரியா சம்மதித்துள்ளது.
இந்த விளையாட்டின்போது இசைப்பதற்காக 140 இசைக்கலைஞர்கள் அடங்கிய இசைக்குழு ஒன்றை வட கொரியா அனுப்புவதற்கு 2 கொரியாக்களும் ஏற்கெனவே இசைந்துள்ளன.
வட கொரியாவின் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொள்வதால், வட கொரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது.
இந்த ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றால், வட கொரியாவின் பரிவாரங்களின் எண்ணிக்கை, அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். போட்டிகளில் குறைவானோரே பங்கேற்பர்.
பிற செய்திகள்
- கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா
- ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்
- ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்
- ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்