You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யு டியூப் நிகழ்ச்சியில் சடலத்தைக் காட்டி வெறுப்பை சம்பாதித்த அமெரிக்க பிரபலம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யு டியூப் நட்சத்திரம் ஜப்பானில் நண்பர்களுடன் காணொளி எடுத்து கொண்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் சடலத்தை காணொளியில் காட்டியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
அந்த காணொளில், லோகன் பால் மற்றும் அவரது நண்பர்கள் ஃபுஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒகிக்ஹாரா காட்டில் இருக்கிறார்கள்.
தற்கொலைகள் அடிக்கடி நிகழும் இடமாக ஒகிக்ஹாரா காடு அறியப்படுகிறது.
லோகன் பாலின் அமானுஷ்ய காடு குறித்த காணொளியில், குழுவினர் ஒரு பிணத்தை பார்க்க நேர்ந்தபோது, அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால், அதேசமயம் நகைச்சுவையும் செய்கிறார்கள்.
லோகன்பால் குழுவினரின் இந்த காணொளி அவமரியாதையாக இருந்ததாகவும், அருவருப்பாக இருந்ததாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்திருத்தனர்.
கடந்த ஞாயிறன்று, இந்த காணொளி யு டியூப்பில் பதிவேற்றப்பட்டது. மில்லியன் கணக்கானோர் லோகன் பாலின் இந்தக் காணொளியை பார்த்துள்ளனர்.
ஆனால், இணையவாசிகளின் எதிர்வினை காரணமாக யு டியூப் தளத்திலிருந்து இது அகற்றப்பட்டது.
யு டியூப் தளத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ள லோகன் பால், காணொளியில் தான் அடைந்த அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தற்கொலைகள் அதிகம் நிகழும் வளர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
காணொளியில் காட்டப்பட்ட தற்கொலை செய்துகொண்ட நபர் குறித்த தகவல் எதுவுமில்லை.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்