You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தாண்டு யூ டியூப் மூலம் லில்லி சிங் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் போகிமோன் ஆகிய விளையாட்டுகளை காணொளியாக பதிவு செய்து யூடியூபில் பகிரத் தொடங்கினார்.
16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை யூடியூபில் பெற்றுள்ள இவரின் காணொளிகளை 10 பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
டான் மிடில்டன் என்பதை தனது இயற்பெயராக கொண்ட இவர், கடந்த ஆண்டின் முதல் 10 பேர்களில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற நான்கு பேர் மட்டும்தான் இந்தாண்டுக்கான முதல் பத்து பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இவ்வருடத்துக்கான பட்டியலில் ஒரேயொரு பெண்தான் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த லில்லி சிங் என்பவர் சுமார் 66 கோடி வருமானத்துடன் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.
1. டேனியல் மிடில்டன் - 105.67 கோடி
2. ஈவன் பாங் - 99.37 கோடி
3. டூட் பெர்பெக்ட் - 89.76 கோடி
4. மார்கிப்லீர் - 80.14 கோடி
4. லோகன் பால் - 80.14 கோடி
6. பியூடைபை - 76.93 கோடி
7. ஜாக் பால் - 73.65 கோடி
8. ரயான் டாய்ஸ்ரிவியூ - 70.52 கோடி
எச்சரிக்கை: மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கம், விளம்பரங்களையும் உள்ளடக்கியது.
ஆறு வயதான ரயான் தனது பக்கத்தில் பலவிதமான பொம்மைகளை குறித்த தனது கருத்தை காணொளியின் மூலமாக தெரிவித்து வருகிறார்.
8. ஸ்மோஸ் - 70.52 கோடி
10. லில்லி சிங் - 67.24 கோடி
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்