You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் பேருந்து முனையத்தில் `தீவிரவாதத் தாக்குதல் முயற்சி'
நியுயார்க்கின் மான்ஹாட்டனில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது. நாங்கள் நியுயார்க்வாசிகள்" என்று பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்குப் பிறகு நியுயர்க் மேயர் பில் டி பிளேசியோ தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை, டைம்ஸ் ஸ்கொயர் அருகே உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அகாயத் உல்லா என்ற 27 வயது நபர், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்த நிலையில், மக்கள் நெரிசலுக்கு இடையில் அதை வெடிக்கச் செய்தபோது அவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
''42ஆவது தெரு, 8ஆவது அவென்யூ, #மான்ஹாட்டனில் ஏற்பட்ட காரணம் அறியப்படாத தீ விபத்து சம்பவத்திற்கு நியூயார்க் நகர போலீசார் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்'' என்று நியூயார்க் காவல் துறை ட்வீட் செய்துள்ளது.
பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் உள்ளச சுரங்கப்பாதையில் குழாய் வெடிகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று ABC செய்திகள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
துறைமுக ஆணைய பேருந்து முனையம், ஓர் ஆண்டிற்கு 65 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும்.
பிற செய்திகள்:
- ''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்
- வெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
- செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரையரங்குகளுக்கு அனுமதி!
- சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை
- கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்