You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம் : சீர்திருத்த நடவடிக்கையா... அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியா...?
செளதியில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் இளவரசர். இவை சீர்திருத்த நடவடிக்கைகளா? அல்லது தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சியா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.
அதற்கு பிபிசி நேயர்கள் பதிவு செய்துள்ள கருத்துகள்.
"அதிகாரத்தை தக்கவைப்பதற்கு வாரிசுகளுக்கிடையே நடத்தப்படும் போர்" என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் காஜப்பா.
இது குறித்து மெர்சல் கில்கிரிஸ்ட், "இப்போது சௌதி அரசு நாட்டை அபிவிருத்தில் பாதையில் செல்வதுக்காக 2030 Saudi Arabia என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அதன் அமைவாக வேலைகளை செய்கின்றன...... இவருடைய முடிவுகள் நாட்டின் நலன் கருதியதாகும். எவன் ஒருவன் நாட்டின்மீது பற்றுள்ளவனோ அவனே உண்மையான தலைவன்." என்கிறார்.
"இளவரசரின் அதிகாரத்தை வலுபடுத்த இதில் எந்த முகாந்திரமும் இல்லை. இது முழுவதும் சீர்திருத்த நடவடிக்கையே. நல்லது நடந்தால் சரி." என்கிறார் பீர் முகமது
"அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் காலடி. உலகமயமாக்கலுக்கு இது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுவதால் இளவரசர் இதை செய்கிறார் என்ற எண்ணம் உதயமாகிறது." என்பது அபுல் கலாம் ஆசாத்தின் கருத்து.
வெற்றி இவ்வாற்றாக பதிவிட்டு இருக்கிறார், "நியாயமான வழியில் சீர்திருத்தங்களை மேற்க்கொண்டால் நிச்சயமாக அதிகாரம் வலுவடையும். இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்ததுதான்."
பஷீர், "பிரிட்டிஷ் பாணியிலான ஆட்சி செளதிக்கு தேவை.திறமையான அரசியல்வாதிகள் அங்கு கிடையாது.ஜனநாயக பாணிக்கு நாடு திரும்ப வேண்டும்." என்கிறார்
"சீர்திருத்தம் நடவடிக்கைதான்!" என்பது சாகுல் ஹமீதின் கருத்து.
பிரதீப், " இது இளவரசர் பதவியை தக்க வைத்துக் கொள்ளவே" என்று பதிவிட்டு இருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்