டிரம்பின் தென் கொரிய பயணம்: தடையில்லா வர்த்தகம்தான் நோக்கமா?

டிரம்பின் தென் கொரியா பயணம் : தடையில்லா வர்த்தகம்தான் நோக்கமா?

பட மூலாதாரம், AFP/ Getty images

படக்குறிப்பு, டிரம்பின் தென் கொரியா பயணம் : தடையில்லா வர்த்தகம்தான் நோக்கமா?

வட கொரியாவின் அணு ஆயுத அபிலாஷைகள் உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில், தென் கொரியா சென்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

ஜப்பானிலிருந்து தென் கொரியா புறப்படுவதற்கு முன்பு, திங்கிட்கிழமை பேசிய ட்ரம்ப்,"அமெரிக்காவின் ஆயுதங்களை கொண்டு ஜப்பானால் வட கொரியாவின் ஏவுகணைகளை வீழ்த்திவிட முடியும்" என்றார்.

டோக்கியோவிலிருந்து புறப்பட்டு நேரடியாக தென் கொரியா சென்றார் டிரம்ப்.

இந்த தென் கொரியா பயணத்தின் முக்கிய நோக்கமாக தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்தான் இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் புதிய விதிமுறைகளை உட்புகுத்துவதில்தான் டிரம்ப் கவனம் செலுத்துவார்.

இந்த பயணத்தில் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் - ஐ சந்திக்கிறார். பின் தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க துருப்புகள், உள்ளூர் அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார்.

தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

தென் கொரியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, டிரம்ப் தென் கொரிய அதிபரை போற்றி புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தென் கொரியாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ராபின் பிராண்ட், "அமெரிக்க அதிபர் தென் கொரியாவில் 24 மணி நேரம் மட்டுமே செலவிட்டாலும், அவருடைய ஆசிய சுற்றுப் பயணத்தில் இது முக்கியமான ஒன்றாக இருக்கும்." என்கிறார்.

மேலும் அவர், "தென் கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இருக்கும் ராணுவ கூட்டணியை இந்த பயணம் வலுப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-க்கான செய்தியாக இருக்கும்." என்று விவரிக்கிறார்.

தென் கொரிய அதிபர் மூன்-க்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் கருத்து வேற்றுமைகள் உள்ளன.

தென் கொரிய அதிபர் மூன், வட கொரியாவை சாந்தப்படுத்த முயற்சி செய்கிறார் என்று டிரம்ப் முன்பே விமர்சித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தையும டிரம்ப் விமர்சித்துள்ளார்.

ஒரு பக்கம் டிரம்பின் வருகையை எதிர்த்து தென் கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, இன்னொரு பக்கம் அவரது வருகையை ஆதரித்து மக்கள் ஊர்வலம் சென்றனர்.

வரும் வாரங்களில் டிரம்ப் சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் செல்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :