பிரமிட்டுக்குள் என்ன உள்ளது? கண்டுபிடிக்க கதிர் தொழில்நுட்பம்

எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரமிடின் உள்ளே சுமார் 30 மீட்டரில் இருந்து 70 மீட்டர் வரை இருக்கும் வெற்றிடம், எதற்கென்று அறியப்படாத நோக்கத்தை கொண்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

4 ஆயிரம் ஆண்டுகள் பழைய பிரமிட்டில், கிராண்ட் கேலரிக்கு மேலே இந்த அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு மிக முக்கிய கண்டுபிடிப்பு இது என்று கல்வியாளர்கள் இதனை விவரிக்கின்றனர்.

பட மூலாதாரம், SCANPYRAMIDS
பெரிய பாறை அமைப்புகளின் உள்ளே ஏற்படும் அடர்த்தி மாற்றங்களை கண்டறியக்கூடிய பிரபஞ்ச கதிர்களை பயன்படுத்தி இதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், SCANPYRAMIDS
பிற செய்திகள்
- கேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்
- திரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வங்கதேச ஆட்டோ ஓட்டுநர்
- கவுன்டரில் ஆளில்லை: டிக்கெட் இல்லாப் பயணிகளிடம் வழியில் கட்டணம் வசூலித்த ரயில்வே
- இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








