போர்ச்சுகல், ஸ்பெயினில் கடும் காட்டுத் தீ: 34 பேர் பலி

போர்ச்சுகல்

பட மூலாதாரம், EPA

மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுகலில் ஏற்பட்டுள்ள தொடர் காட்டுத்தீயில் இதுவரை குறைந்தபட்சம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போர்ச்சுகல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூற்றி நாற்பதி ஐந்துக்கும் அதிகமான இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை நிறுத்த ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். வட கிழக்கு ஸ்பெயினின் எல்லையில் உள்ள கலிசியாவில் மூன்று பேர் இறந்துள்ளனர். 

போர்ச்சுகலில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 15 பேர் மோசமான நிலையில் உள்ளனர். ஒர் ஒரு மாத குழந்தை உட்பட பலர் காணாமல் போய் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

போர்ச்சுகல்

பட மூலாதாரம், EPA

அந்தப் பகுதியை பார்வையிட பிரதமர் மரியானா ரஜோய் வந்தபோது, சில இடங்களில் வேண்டுமென்றே தீ பற்ற வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழை கொண்ட பருவம் நீண்ட காலம் நீடித்ததால் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்கள் தீயால் பாதிக்கப்பட காரணமாக அமைந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :