You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரியவகை `காதல்' நத்தையின் வாழ்வும், மரணமும்!
துணை தேடும் படலத்தின் மூலம் பிரபலமான, `இடதுபக்கம் ஓடுகள் சுருண்ட` ஜெரிமி என்ற நத்தை, மரணமடைந்தது.
இருந்தபோதும், இறப்பதற்கு முன்பு, ஜெரிமியின் பரம்பரை வாழும் வகையில், அதன் துணையான டோமேயோ, அதன் பிள்ளைகள் ஈன்றுள்ளது,
`லட்சத்தில் ஒன்றாக` கருதப்படும் இந்த நத்தை புதன்கிழமை இறந்ததாக, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில், ஜெரிமிக்கு ஏற்ற நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவை `பிள்ளைகள்' பெற்றெடுக்காமலே இருந்தன. இதனால், மே மாதகாலத்தில், ஜெரிமிக்கு பிள்ளைகள் பிறப்பது கடினம் என்பது போலவே தெரிந்தது.
டோமேயோ, வலதுபக்கம் சுருண்ட ஓடுகளை கொண்ட 56 பிள்ளைகளை ஈன்றுள்ளது.
அதில் மூன்றில் ஒரு பங்கு குட்டிகளுக்கு மட்டுமே, ஜெரிமி தந்தையாகும்.
மற்ற குட்டிகள், டோமேயோ இப்ஸ்விச்சிற்கு வருவதற்கு முன்பு, தொடர்பில் இருந்த வேறொரு `இடபக்கம் சுருளப்பட்ட` ஓடுகளை கொண்ட நத்தையினுடையதாகும்.
ஜெரிமியின் சரியான வயது என்ன என்பது தெரியவில்லை என கூறும் பல்கலைக்கழகம், அது கிட்டத்தட்ட தனது இரண்டாம் வயதில் இருந்தது என்றனர்.
ஜெரிமியின் காதல் படலம்
அக்டோபர் 2016: நாட்டிங்காம் பல்கலைக்கழகம், ஜெரிமிக்காக, ஒரு `இடதுபக்க சுருள் ஓடுகள்` கொண்ட நத்தை தேவை என்பதையும், அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்தது.
காரணம், இடதுபக்க சுருள் மற்றும் வலதுபக்க சுருள் கொண்ட நத்தைகளின் பிறப்புறுப்புகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.
நவம்பர் 2016: இரண்டு பொருத்தமான நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன.
அதில் ஒன்று, இப்ஸ்விச்சில் உள்ள ஒரு மரத்தில் ஏறியது, மற்றொன்று மஜோர்காவில் உள்ள ஒரு நத்தை பண்ணையின் பாணையில் தப்பி சென்றது.
ஜனவரி 2017: ஜெரிமி குட்டிகளை பெறவில்லை.
மே 2017: ஜெரிமி அங்கேயே இருந்தது. பின்பு, இரு நத்தைகளும் இனப்பெருக்கம் செய்ய முடிவு செய்து, 170 `வலதுபக்க சுருள்` கொண்ட நத்தைகளை ஈன்றன.
அக்டோபர் 2017: ஜெரிமி பிள்ளைகளை ஈன்றது; அவை அக். 5 அல்லது 6 ஆம் தேதிகளில் குஞ்சுபொறித்தன.
அக்டோபர் 2017 : அந்த மாதம் 11ஆம் தேதி, ஜெரிமி இறந்தது.
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின், வாழ்க்கை அறிவியல் பள்ளியை சேர்ந்த டாக்டர் ஆங்கஸ் டேவிட்சன், ` பிபிசி ரேடியோ 4 மூலமாக இந்த விஷயம் உலகை போய் சேர்ந்தது. நாங்கள் இதன்மூலம் 6 இடதுபக்க சுருள்கொண்ட நத்தைகளை கண்டறிந்தோம். மக்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.`
அவரின் கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அவர், ஒரு நத்தையின் சுருள், கடிகாரசுற்றாக பிறக்கிறதா அல்லது அதற்கு எதிர்திசையில் பிறக்கிறதா என்பதை தீர்மானிக்கும் மரபணுவை அவர் கண்டறிந்தார்.
அவர் கூறுகையில், மனிதர்கள் உட்பட பிற விலங்குகளின் உடலில் ஒத்தமைவின்மையை பாதித்த மரபணு அதுவாகவே இருக்கும் என்றும், இது நம் உடலின் பாகங்கள் ஏன் அந்தந்த இடத்தில் உள்ளன என்பதற்கான புரிதலை அளிக்கும் என்றும் கூறுகிறார்.
`இது ஜெரிமியின் முடிவாக இருக்கலாம். ஆனால் அது பிள்ளைகளை ஈன்றுள்ளது, இது எங்களின் நீண்டகால ஆராய்ச்சியின் இலக்கு` என்றார்.
` நாங்கள் இந்த வகை நத்தைகள் ஏன் அரிதானவை என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதுமட்டுமின்றி, உடலின் இந்த வலது மற்றும் இடது பக்கங்கள், மூலக்கூறு நிலையிலேயே எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றன,
இதே முறையை மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறதா என்பதையும் அறிய விரும்புகிறோம்`.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்