சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான, சே குவெரா, பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் கியூபாவில் நினைவு தினம் ஒன்று அனுசரிக்கப்பட்டது.

சே குவெரா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கியூபர்கள் பலருக்கு நாயகன் சே குவெரா

கியூபப் புரட்சியில் முடிவைத் தந்த மோதல் ஒன்றில் கிளர்ச்சியாளர்களுக்கு சே குவெரா தலைமை தாங்கிய நகரான, சாண்ட்டா கிளாராவில் இந்த நிகழ்வுகள் நடந்தன.

தொடர்புடைய செய்திகள்

சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் குழுமினர்.

தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வில் கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

அவரது கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை ரவுல் காஸ்ட்ரோ வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சே குவெரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கியூபப் புரட்சியின் தளகர்த்தர்கள் - சே குவெரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ

சே குவேரா பொலிவியாவில் 1967ம் ஆண்டு இதே தினத்தில் படையினரால் பிடிக்கப்பட்டு ஒரு நாள் பின்னதாக கொல்லப்பட்டார்.

அவரது உடல் கியூபாவுக்கு 1997ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட்து.

எர்னெஸ்டோ சே குவேரா குறித்த கருத்துணர்வுகள் இன்னும் பிளவுபட்டுள்ளன.

அவர் சுய தியாகத்துக்கும், உறுதிப்பாட்டுக்கும் ஒரு முன் மாதிரியாக இருந்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவரது விமர்சகர்களோ அவரை கொடூரமானவர் என்று கருதுகின்றனர்.

பிற தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :