You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
4 ஆண்டுகளில் நேட்டோ படையின் உதவி ஆஃப்கனுக்கு தேவையிருக்காது: ஆப்கன் அதிபர்
- எழுதியவர், ஜஸ்டின் ரெளலட்
- பதவி, தெற்காசிய செய்தியாளர்
காபூலில் உள்ள அதிபரின் அரண்மனையில், பிபிசியின் பிரத்யேக நேர்காணலின்போது, ஆஃப்கனிஸ்தானின் அதிபர் அஷ்ரஃப் கனி, தனது நாடு சந்தித்து வரும் சூழல்கள் குறித்து பேசுகிறார்.
`உலகிலேயே மிக மோசமான வேலை இது` என்கிறார் ஆஃப்கன் அதிபர்.
ஆனால், அதுவும் உண்மை தான். ஆஃப்கனிஸ்தானில் கடினமான சூழல்களுக்கு குறைவே கிடையாது. அதிலும், அதிகமாக இருக்க கூடிய ஒன்று பாதுகாப்பு. அவரின் நாடு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக போரில் உள்ளது. இருந்த போதும், ஆச்சிரியப்படுத்தும் வகையில், அந்த நாட்டிற்கு நேட்டோ படைகளின் உதவி இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை குறித்து அவர் கூறுகிறார்.
நேட்டோ படைகளை இன்னும் நான்கு ஆண்டுகளில் வெளியேற்றி விடலாம் என அவர் தெரிவிக்கிறார்.
தாலிபன் மற்றும் பிற குழுக்களுடனான சண்டையில் இருந்து நேட்டோ படையினர் விலகிக்கொண்டு, ஆப்கன் படையினர், மூன்று ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர் என்பது நம்பிக்கை தரக்கூடியது என பல ராணுவ ஆய்வாளர்களும், தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 14 ஆயிரம் நேட்டோ படையினர், ஆஃப்கன் வீரர்களுக்கு, `பயிற்சி, அறிவுரை மற்றும் உதவி` செய்ய இன்னும் ஆஃப்கனில் உள்ளனர். தாலிபனுக்கு எதிரான சண்டையை ஆப்கன் வீரர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
கடந்த முன்று ஆண்டுகள் கடுமையானவை என்பதை அதிபர் மறுக்கவில்லை. 12 வயதுடைய ஒருவர் 30 வயதுடையவரின் பொறுப்புக்களை பார்த்துகொள்வது போல நாங்கள் உணர்கிறோம். ஆனால், இந்த முழு செயல்பாட்டில் நாங்கள் வளர்ந்துள்ளோம். மேலாண்மை மற்றும் தலைமை பண்புகள் உள்ளிட்ட விஷயங்கள் சரியான முறையில் நடக்க துவங்கியுள்ளன`.
அவர் மேலும் கூறுகையில்,`இன்னும் 4 ஆண்டுகளில், எங்களின் படையினரால் அரசியலமைப்பு பணிகளை செய்ய முடியும் என நாங்கள் நினைக்கிறோம், அதுவே, அதிகாரத்தில் சக்தி ஆகும்`.
அவர், குறிப்பிடப்பட்ட அந்த காலகட்டத்திற்கு பின்பு, சில வெளிநாட்டு படைகள், தீவிரவாத்ததிற்கு எதிரான உலகளாவிய போருக்காக ஆஃப்கனில் இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். இருப்பினும், ஆப்கன் படைகள், தாலிபனிற்கு எதிரான சண்டையை நடத்துகிறார்களா என நான் கேட்டவுடன், எந்த தயக்கமும் இன்றி, அவர் `ஆமாம்` என்கிறார்.
அவர், தாலிபன் இரண்டு வியூகங்களுடன் செயல்படுவதாக கூறுகிறார். அதன் நோக்கம், அரசை தூக்கி எரிவது அல்லது, இரு விதமான அரசியல் புவியியலை உருவாக்குவது. இவை அந்த முழு நாட்டையும் பிரிக்கும் என்கிறார்.
கடந்த ஆண்டு, ஆஃப்கனிஸ்தான் தனது படையினரில் 10 சதவிகிதம் பேரை இழந்துள்ளது. அதாவது, 7ஆயிரம் பேர் வரையில் இறந்தனர், 12 ஆயிரம் பேர் வரை காயமுற்றதுடன் ஆயிரக்கணக்கானோர் வனாந்திரப்படுத்தப்பட்டனர்.
மேற்கத்திய நாடுகள், ஆஃப்கனில் இருக்க கூடிய மோதலின் இயற்கையை புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டும் அவர் தீர்கமாக நம்புகிறார். அவரின் அரசு உள்நாட்டு போரை நடத்தவில்லை என்றும், போதைப்பொருளுக்கு எதிரான போரை நடத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
`உலகளவில் ஹெராயின் போதைப்பொருளை ஏற்றுமதி செய்வதில் பெரிய குழுவாக தாலிபன் உள்ளது. ஹெராயின் மீது ஏன் உலகம் கவனத்தை செலுத்தவில்லை? இது கருத்தியலுக்கான போரா அல்லது போதை பொருளுக்கு எதிரான போரா? இந்த பொருளாதார குற்றம் வெளியே தெரியப்பட வேண்டும்` என்கிறார் அதிபர்.
ஆக, உங்களின் உட்சபட்ச நோக்கம் என்ன என்று நான் கேட்டேன்.
`தாலிபனுடன் ஒரு அமைதி ஒப்பந்தம்` என உடனடியாக பதிலளித்தார்.
`இந்த வியூகத்தின் முழு நோக்கம் என்பது, ஒரு அரசியல் ரீதியான தீர்வை காண வேண்டும், அந்த தீர்வும், பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வாக இருக்க வேண்டும். மக்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். கடந்த 40ஆண்டுகளாக நாங்கள் வாழ்க்கையை வாழ மறுக்கப்படுகிறோம். எங்கள் மக்களின் திறனை நான் பாராட்டுகிறேன், இதுவே வேறு நாடாக இருந்திருந்தால், உடைந்து போயிருக்கும்`.
அமெரிக்க படைகள், கால அளவின்றி, ஆஃப்கனிஸ்தானில் இருக்கும் என கடந்த மாதம் அறிவித்த, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பை, அதிபர் கனி வெகுவாக பாராட்டுகிறார். நாட்டில் நிலை எவ்வாறு என்பதை பொருத்தே, அவர்கள் விலக்கி கொள்ளும் நிலை இருக்குமே தவிர தன்னிச்சையானதாக டிரம்பின் முடிவு இருக்காது.
ஆஃப்கனில் உள்ள நேட்டோ படைகளுக்கு உதவியாக இன்னும் சில ஆயிரம் அமெரிக்க வீரர்களை அனுப்புவதாகவும், அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
`ஊழலை கையாள முதல் வழிமுறை என்பது, அதில் ஈடுபடாமல், நீங்கள் அதை எதிர்கொள்ளும் திறனை பெறுவது. யார் ஊழல் செய்தாலும், எந்த பதவி அல்லது உறவாக இருந்தாலும், அவர் ஒரே சட்டத்தில் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
`மூன்று நட்சத்திர அந்தஸ்து உடைய ஒரு ராணுவ அதிகாரி, எரிபொருட்கள் திருடிய வழக்கில் சிறையில் உள்ளார். ஆப்கனின் அதிக பணம்படைத்தவர்களில் ஒருவரும், யாராலும் நெருங்க முடியாது என மக்களால் நினைக்கப்பட்டவரும் தற்போது சிறையில் உள்ளார். நீதித்துறையில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். நான் எப்போதுமே முழுமையான அரசியல் ஒத்துழைப்பு அளிப்பேன்`.
ஆஃப்கன் அதிபரின் செய்தி மிக தெளிவானதும், `சுய நம்பிக்கை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அவை எழுதப்பட்டவை`.
`தேர்தல் தான் உங்கள் இலக்கு என்றால், நீங்கள் சீர்திருத்தத்தில் ஈடுபடுவீர்கள். சீர்திருத்தம் தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதற்கான வழியாக தேர்தல் இருக்க வேண்டும். மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய தான் நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். உங்களை நிலை நிறுத்திகொள்ள அல்ல. அரசியல்வாதிகள் மிகவும் பழமைவாதிகள் ஆகிவிட்டனர். ஆனால், நம் காலகட்டத்திற்கு, நல்ல கற்பனைத்திறனும், தைரியமான நடவடிக்கைகளுமே தேவை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்