You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவு கொண்டு செல்லும் பைகளால் உணவில் நஞ்சு?
இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவு பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படும் பைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்ற செய்தி நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
கசிவுகள் எதுவும் ஏற்படாவிட்டாலும்கூட, இதுபோன்ற பைகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்வது பாக்டீரியாக்களை உருவாக்கி, வயிற்றுக்கு தீங்கை ஏற்படுத்தலாம் என்று உணவு தரநிலை முகமையான எஃப்.எஸ்.ஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் சோப்பு போன்ற வீட்டுப் பொருட்கள் ஆகியவற்றை கடைக்காரர்கள் தனித்தனியான பைகளில் கொடுக்கவேண்டும்.
மறுபயன்பாட்டுக்கு உரிய பைகள் பிரத்யேகமாக குறியிடப்பட்டு எளிதாக கண்டறியும் வகையில் வண்ணப் பைகளாக இருந்தாலும், பெயரிடப்பட்டிருந்தாலும், அவை பிற பைகளில் இருந்து பிரிந்தறிய உதவும் என்று உணவுத் தரநிலைகள் நிறுவனம் கூறுகிறது.
பொருட்கள் சிந்திவிடுவதோ, கசிவதோ சேதமடைவதை பார்க்க முடிந்தால், பிளாஸ்டிக் பைகளை மாற்றிக் கொள்ளலாம், துணிப்பைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
"அவை பருத்தி / துணியால் செய்யப்பட்ட பைகள் பலவிதமான பயன்பாடுகளுக்குப் பிறகும் வெளிப்படையாக சேதமடையாகாத நிலையில் அவற்றை உணவுப்பொருட்களை கொண்டு செல்வதற்கு மீண்டும் பயன்படுத்தலாம். வழக்கம்போலவோ அல்லது சலவை இயந்திரத்திலோ துவைத்து பயன்படுத்தலாம் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்," என எஃப்.எஸ்.ஏ தனது வலைத்தளத்தில் கூறியுள்ளது.
உணவில் கலக்கும் பாக்டீரியா
இது அரிதான நிகழ்வாக இருப்பினும் கடையில் இருந்து வாங்கி வரும் கோழி இறைச்சி, நோய்த்தொற்றுக்கான சாத்தியமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
கிராமிளைகோபாக்டர் என்ற பாக்டீரியா, கோழி இறைச்சியை கொண்டு செல்லும் பையில் காணப்படுவதாக எஃப்.எஸ்.ஏவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இங்கிலாந்தில் உணவு நச்சுக்கான பொதுவான காரணமாக இருக்கிறது.
கிராமிளைகோபாக்டர் பாக்டீரியா, பொதுவாக கலப்பட உணவைச் சாப்பிட்ட சில நாட்களில் உருவாகிறது. அதனால் அடிவயிற்றில் வலி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் சில நேரங்களில் வாந்தியெடுத்தல் போன்றவை இந்த பாக்டீரியாவின் பாதிப்புக்கு அறிகுறியாகும்.
முட்டைகள், மீன் மற்றும் மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளும் உணவில் நச்சு ஏற்படும் அபாயத்தை கொண்டுள்ளதாக எஃப்.எஸ்.ஏ இணையதளம் கூறுகிறது
இங்கிலாந்தில் உள்ள பெரிய கடைகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒற்றைப் பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கு 5பென்னி என்ற கட்டணத்தை வசூலிக்கின்றன.
எனினும், சமைக்கப்படாத மீன், இறைச்சி அல்லது கோழி வகைகள் போன்ற சில பொருட்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்காக கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை.
2011 இல் வட அயர்லாந்தில் வேல்சிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்திலும் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வழக்கம் தொடங்கியது.
பிற செய்திகள்:
- இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
- சே குவேரா நினைவஞ்சலி: பொலிவிய அரசுடன் முரண்படும் முன்னாள் ராணுவத்தினர்
- தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் பனித் தொழில்நுட்பம்
- லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு: பரபரப்பு காட்சிகள் (புகைப்படத் தொகுப்பு)
- சபர்மதி: சிறைச்சாலை காந்தி கோயிலாக மாறியது எப்படி?
- வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்