பளுத்தூக்கும் உபகரணம் நசுக்கி ஆஸ்திரேலிய சிறுவன் பலி

ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி கூடத்தில் பளுத்தூக்கும் உபகரணம் மேலே விழுந்து நசுங்கி உயிரிழந்தார்.

பிரிஸ்பேனில் பென் ஷாவ் என்னும் 15 வயதான அந்த இளைஞர் கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது அவ்விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த சனிக்கிழமை அன்று இறந்தார். எவ்வளவு நேரம் அவர் சிக்கியிருந்தார் என்பது தெரியவில்லை.

"நேற்று மதியம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை சூழ்ந்திருக்கும்போது பென் காலமானார்," என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

"பென் ஒரு தனது குடும்ப மரபை விட்டுவிட்டு அவரது உறுப்புகளையும் திசுக்களையும் நன்கொடையாக வழங்கி மற்றவர்களுக்கு வாழ்க்கை அளித்தார்."

இவ்விபத்து குறித்த விசாரணையானது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியுமா என்று சொல்ல முடியாது என்றும், மேலும் முழுமையான விசாரணையை நடத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த உடற்பயிற்சி விதிமுறையின்படி, 16 வயதிற்குட்பட்டவர்கள் எடையை உயர்த்தும்போது மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்