You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்தார் சரோவர் அணை திறப்பு: அணை குறித்த முக்கிய அம்சங்கள், நன்மைகள், சர்ச்சைகள்
தனது 67-ஆவது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) குஜராத்தில் நர்மதா அணையின் குறுக்கே சர்தார் சரோவர் அணையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
சர்தார் சரோவர் அணை இந்தியாவின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய திட்டமாக இருக்கலாம். ஆனால், இது இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் கனவு திட்டமாகும்.
இந்நிலையில், சர்தார் சரோவர் அணை குறித்த 5 குறிப்பிடத்தக்க அம்சங்களை இங்கே காணலாம்.
5 முக்கிய அம்சங்கள்:
- சர்தார் சரோவர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர் வளத் திட்டம் ஆகும்.
- மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற முக்கிய மாநிலங்களுடன் இந்த திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
- தண்ணீர் வெளியேற்றும் திறனைப் பொறுத்தவரை, இது உலகின் மூன்றாவது பெரிய அணையாகும்.
- 532 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நர்மதா முக்கிய கால்வாய், உலகிலேயே நீளமான பாசன கால்வாய் ஆகும்.
- சர்தார் சரோவர் அணை இந்தியாவில் மூன்றாவது உயரமான அணை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அணையின் உயரம் உயர்த்தப்பட்டது.
அணையால் கிடைக்கும் நன்மைகள்:
- குஜராத், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிராவில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளின் பாசனத்திற்கு சர்தார் சரோவர் அணை நீரை பயன்படுத்த முடியும்.
- ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அதிகமான மக்கள் நர்மதா நீரில் குடிக்க தண்ணீர் கிடைக்கும்.
- 1450 மெகாவாட் மின்சார உற்பத்தி இலக்கு சர்தார் சரோவார் திட்டத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த அணையால் அருகில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பலனடையும்.
திட்டம் தொடர்பான சர்ச்சைகள் :
- மேதா படேகரின் தலைமையின்கீழ் நர்மதா பச்சோ ஆந்தோலன் இயக்கம் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது.
- இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்தில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும், சுற்றுச்சூழல் சூழலை பாதிக்கும் என்றும் அந்த இயக்கம் கூறியது.
- பெரிய அணைகளின் கட்டுமானம் பூகம்பத்தின் ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் வாதிட்டனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்