ஆஸ்திரேலியா: கண்ணைக் கவரும் 'இளஞ்சிவப்பு பவளப்பாறைகள்'

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் மிகப்பெரிய கவர்ச்சிகரமான நிகழ்வு என்று சொல்லும் வகையில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு பவளப்பாறைகள் ஆஸ்திரேலியாவை சுற்றியுள்ள கடலில் பெரிய அளவில் உருவாகிறது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) என்பது விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய இடம். 1,430 மைல்கள் நீளத்திற்கு நீண்டுள்ள இந்த இடத்தில் 3000க்கும் அதிகமான பவளப்பாறைகள் கொண்ட பவள காலனிகளால் ஆனவை.

இவற்றில் பெரும்பாலானவை இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றவாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பவளப்பாறைகள் விந்தணு மற்றும் முட்டைகளை வெளியேற்றும்போது நீரில் அவை முளைத்து முட்டைகளாக மேல்நோக்கி மேற்பரப்பிற்கு வந்து மிதக்கும். அவை கருத்தரித்து, முட்டைகள் லார்வாக்களாக வளர்வதற்கு முன்பே கடல்படுகையில் தங்களுக்கான சொந்த காலனியைத் உருவாக்க வேண்டும்.

பெரும் தடுப்புப் பவளத்திட்டு பகுதியில் இளவேனில் காலத்தில் பாலின செல்கள் முதிர்ச்சியடைவதற்கு போதுமான வெப்பநிலை அதிகரிக்கும்போது இந்த நிகழ்வு நடைபெறும். ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் பவளப்பாறைகள் இலையுதிர் காலத்தில் நடைபெற்றாலும், சில வடபகுதிகளில் இரண்டு பருவங்களிலும் இவை உருவாகின்றன.

பெளர்ணமிக்கு பிறகு உருவாகும் இவை, அலைகளின் வேகம் இயல்பாக இருக்கும்போது முட்டைகளும், விந்துக்களும் அடித்துச் செல்லப்படாமல், கரையோரங்களில் சுதந்திரமாக மிதக்கின்றன.

பிற உயிரினங்களால் பகல் வேளைகளில் முட்டைகள் உண்ணப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இரவின் இருள் அந்த ஆபத்தை பாதியாக குறைக்கிறது.

ஒரே நேரத்தில் பெருமளவிலான முட்டைகள் வெளியாவதால், அவற்றை இரையாக கொள்பவை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உண்ணமுடியாது என்பதால் போதுமான அளவு பவளப்பாறைகள் முளைக்கின்றன.

முற்காலத்தில் கண்கள் இல்லாமல் தோன்றிய உயிரினங்கள் என்று அழைக்கப்படும் இவை, ஒருங்கிணைந்த முயற்சி சுவாரசியமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகளை ஆராயும் டாக்டர் ஓரென் லெவி, டாக்டர் பில் லெகட், பேராசிரியர் ஹௌக்-குல்பெர்க் ஆகியோர், இவை நீல நிறத்தில் உணர்திறன் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவை சந்திரனின் சுழற்சியில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விளக்குகின்றன.

பவளப்பாறைகள் தொடர்பான வெகுஜன வளர்ச்சியின் பகுப்பாய்வில், இது அண்மை கண்டுபிடிப்பு. ஏனென்றால், இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தாலும், 1981 ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது.

அங்கு நடைபெறும் வருடாந்தர நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் டைவர்ஸ் (நீர் மூழ்குபவர்கள்) , அங்கு முட்டைகள் மற்றும் விந்துக்கள் நீரின் மேற்பரப்பில் நீந்தி செல்வதை 'நீருக்கடியில் பனிமலை' என்று விவரிக்கின்றனர்.

பவளப்பாறைகளில் இருந்து வெளிவரும் ஆயிரக்கணக்கான பாலியல் செல்கள், பெரும்பாலும் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத் துகள்களாக ஒளிரும்.

இவை அனைத்தும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் மிளிரும் பூசப்பட்ட மெல்லிய கடல்களின் மேற்பரப்பில் முடிவடையும் இவை, பல மைல்களுக்கு நீண்டுள்ளவை. இவற்றை செயற்கைக்கோள் படங்களிலும் தெரியும். இவற்றை பூமியின் மிகப்பெரிய பாலியல் நிகழ்வு என்று அழைத்தாலும் ஆச்சரியமில்லை!

பிற செய்திகள் :

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :