பருவகால மாற்றத்தால் ஆஸ்திரேலிய பவளப்பாறை அமைப்பிற்கு கடும் அச்சுறுத்தல்கள்

உலகிலேயே மிக பெரிய நீர்வாழ் உயிரினமாக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடற்கரையேரத்தின் தொலைதூரத்தில் காணப்படும் மாபெரும் பவளப்பாறை அடுக்கு அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பருவகால மாற்றத்தால் இந்த பவளப்பாறை அடுக்கில் ஏற்படுகின்ற கடும் அச்சுறுத்தல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடல் நீரின் வெப்பம் உயர்ந்ததால், பவளப்பாறை அடுக்குகளை வெளிறச்செய்துவிட்டது. இதனால், இந்த பாறை அடுக்கின் வடக்கு பகுதியில் 700 கிலோ மீட்டர் நெடுகிலும் மூன்றில் இரண்டு பகுதி பவளப்பாறை உயிரினங்கள் கொல்லப்பட்டன.

இந்த வழிமுறை பவளப்பாறைகளுக்கு அழுத்தங்கள் வழங்குவதோடு, அப்பாறைகளுக்குத் தனி சிறப்பு மிக்க நிறங்களை தரும் பல்வேறு வகையான பாசிகள் வெளியேற்றப்படவும் காரணமாகின்றன.

மனிதர்கள் ஏற்படுத்துகின்ற பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களும், யுனெஸ்கோவின் உலக மரபு செல்வ பகுதியாக இருக்கும் இந்த இடத்தை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் செய்துவிடும் என்ற பயத்தை ஏற்படுத்தி வருகின்றன.