You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுபவர்கள் மீது நடவடிக்கை: டிடிவி தினகரன்
அ.தி.மு.கவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதில் கலந்துகொள்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.
ஆளும் அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கும், டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையில் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதியன்று அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டமானது அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டப்படும் என எடப்பாடி அணி அறிவித்தது.
தலைமைக் கழக நிர்வாகிகள் இதனை அறிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தக் கூட்டம் குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், பொதுக்குழு என்ன நோக்கத்திற்காகக் கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லையென்றும், யாருடைய கையெழுத்தும் அந்த அறிவிப்பில் இல்லையென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
கட்சியின் விதிமுறைகளின்படி, பொதுக்குழுவையும் செயற்குழுவையும் பொதுச்செயலாளர் என்ற முறையில் வி.கே. சசிகலா மட்டுமே கூட்ட முடியும் என்றும் செப்டம்பர் 12ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்ற அறிவிப்பிற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.
கட்சித் தொண்டர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் மீறி கலந்துகொள்பவர்கள் மீது கட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்
- ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?
- மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?
- தங்க கழிவறை: விசித்திர பொருட்களால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள்
- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு
- பாரிஸில் திறக்கப்பட்டிருக்கும் `நிர்வாணப் பூங்கா`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்