You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்வாண விரும்பிகளை வரவேற்கும் பாரிஸில் `நிர்வாணப் பூங்கா`
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் நிர்வாணமாக வருபவர்களுக்கென ஒரு தனி `நிர்வாணப் பூங்கா` திறக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு இந்த நிர்வாணப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தப் பூங்கா திறக்கப்பட்டிருக்கும்.
இந்த பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்து களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
``பாரிஸ் பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது`` என பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் பெனிலோப் கோமிட்ஸ் கூறியுள்ளார்.
நிர்வாணமாகப் பூங்காவுக்கான இடம் என்பது அறிவிப்பு பலகை மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படும். 8:00 முதல் 19:30 மணி வரை இந்த நிர்வாணப் பூங்கா திறந்திருக்கும்.
பிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை, நிர்வாண விடுமுறை விடுதிகளைக் கொண்டிருக்கும் நாடு என்பதால், நிர்வாண விரும்பிகளுக்கு பாரிஸும் இடம் தர வேண்டும் என இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை சேர்ந்த ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
"இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை இது காட்டுகிறது. நிர்வாணம் குறித்து மக்களின் அணுகுமுறை, எங்களின் மதிப்புகள் மற்றும் இயற்கைக்கான நமது மரியாதை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவும்" எனவும் அவர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பூங்காவை பயன்படுத்தலாம் என அவர் மதிப்பிடுகிறார்.
அதே சமயம் இத்திட்டம் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கடந்த வருடம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது ஒரு அரசியல்வாதி இதனை "பைத்தியக்காரத்தனம்" என விமர்சித்தார்.
பாரிஸில் ஏற்கனவே ஒரு நிர்வாண பொது நீச்சல் குளம் உள்ளது. நிர்வாண விரும்பிகள், வாரத்திற்கு மூன்று முறை அங்கு நிர்வாணமாக நீந்தலாம்.
பிற செய்திகள்:
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்
- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு
- எடப்பாடி அரசு பலத்தை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
- பேனசீர் பூட்டோ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் விடுதலை
- மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி
- ஹ்யூஸ்டன்: தொழிற்சாலை வெடித்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :