You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?
"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு பிறகு குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் ஹன்சான் தந்தையுடன் காணப்பட்டார்.
ஹனிப்ரீத் ஹன்சானும், ராம் ரஹீமுடன் அரசு ஹெலிகாப்டரில் இருந்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் ஹரியானா காவல்துறை தலைமை இயக்குநர் பி.எஸ் சாந்துவிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதிலளித்தார்.
இந்நிலையில் இணையதளம் முதல் சமூக ஊடகங்கள்வரை ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளின் பின்னணி பற்றி பல கருத்துகள் உலா வருகின்றன.
பாபா ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் ஹன்சான் குறித்த 5 முக்கிய விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.
1 - சாமியாருக்கு பத்ம விருது வழங்க பரிந்துரை
இந்த ஆண்டுக்கான "பத்ம" விருதை குர்மீத் ராம் ரஹீமுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று ஹனிப்ரீத் உட்பட ராம் ரஹீமின் பக்தர்கள் கணிசமாக இணைந்து பரிந்துரை செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக இணையதளம் கூறுகிறது. ஆனால் அந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
2 - சமூக சேவைக்கு அர்ப்பணிப்பு
தேரா அமைப்பிற்கு வருபவர்களுக்கு தேவையான தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து தருவதாக தனது இணையதளத்தில் ஹனிப்ரீத் ஹன்சான் கூறியுள்ளார்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக பெருநகரங்கள் முதல் வனங்கள் வரை பயணிக்க தான் தயங்குவதில்லை என்றும் ஹன்ப்ரீத் ஹன்சன் கூறுகிறார்.
3 - ஹன்சான் தொழில்முறை நடிகர்களுக்கு போட்டியா?
தனது அதிகாரபூர்வ வலைதளத்தில், "ஹனிப்ரீத் நடிப்புக்காக எந்தவித பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், தொழில்முறை நடிகைகளைவிட திறமையாக நடிக்கக்கூடியவர், இவை அனைத்தும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிடம் வந்த திறமைகள்" என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
4 - சமூக ஊடகங்களில் தீவிர செயல்பாடு
தேரா சச்சா செளதா அமைப்புக்கு இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் ஹனிப்ரீத் ஹன்சான் ஈடுபட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் அவரை "லைக்" செய்து தொடர்கிறார்கள்.
5 - கணவர் மீது ஹனிப்ரீத் வழக்கு
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி ஹனிப்ரீத் ஹன்சானை பிரிப்பதாக, தேரா சச்சா அமைப்பின் தலைவர் மீது கணவர் விஷ்வாஸ் குப்தா குற்றம்சாட்டினார். அதன் பிறகு தனது கணவருக்கு எதிராக ஹனிப்ரீத் சிங் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து தேரா தலைமையகத்திலேயே ஹனிப்ரீத் வசிக்கத் தொடங்கினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :