You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்
இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட `யுஎஸ்எஸ் இண்டியானாபொலிஸ்` என்ற கனரக கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த போர் கப்பல் கடலுக்கு அடியில் 18,000 ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமாவில் பிற்காலத்தில் போடப்பட்ட அணுகுண்டிற்கான பாகங்களை எடுத்துச் செல்லும் ரகசிய பணியில் இருந்து இண்டியானா பொலிஸ் போர்க்கப்பல் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது அது அழிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த 1,196 பேரில் வெறும் 316 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். அமெரிக்க கடற்படை வரலாற்றில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது இந்த போர்கப்பலில்தான்.
இந்த கண்டுபிடிப்பை `பணிவாக` கருதுவதாக கப்பலின் சிப்பாய்களை தேடும் குழுவின் தலைவரும், மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனருமான பால் அலென் தெரிவித்தார்.
1945ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி, பிலிப்பைன்ஸ் கடலில், குவாமிற்கும் லேடேவிற்கும் இடையே, ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலிருந்து வந்த டார்பேடோ ஆயுதத்தால் இண்டியானாபொலிஸ் கப்பல் அழிக்கப்பட்டது.
அந்த கப்பல் மூழ்கிய தருணத்தில் அதிலிருந்து 800-900 பேர் தப்பித்தனர். அந்த கப்பலிலிருந்து எந்த அபயக் ஒலியும் பெறப்படவில்லை. சுறா மீன்கள் அதிகமாக காணப்பட்ட அந்த கடல் பகுதியில், நான்கு நாட்களுக்கு பிறகு தப்பியவர்களை மீட்ட போது அதில் வெறும் 316 பேரை மட்டுமே உயிருடன் இருந்தனர்.
12 நிமிடத்தில் கப்பல் மிக வேகமாக மூழ்கியது மற்றும் அபயக்குரல் ஒலி எழுப்பாதது ஆகிய காரணங்களால் அந்த கப்பலின் இருப்பிடம் ஒரு நீண்ட நாள் மர்மமாகவே இருந்தது.
இந்த கப்பல் அழிவதற்கு முந்தன இரவு, அது காணப்பட்ட பகுதியாக கடற் ஆய்வாளர்களால் பெருங்கடலில் ஒரு பகுதியை சுட்டிக்காட்டிய பிறகு, அலேனின் குழு, இந்த கப்பலை ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி கண்டுபிடித்தனர்.
`லிட்டில் பாய்` என்று பெயரிடப்பட்ட அணு குண்டிற்கான பாகங்கள் மற்றும் அதன் அணு உலைக்கு செறிவூட்டிய உரேனியம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் கப்பலின் கடைசி ரகசிய நடவடிக்கை அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த பொருட்கள், இரண்டாம் உலகப்போரின் இறுதி ஆண்டில், அமெரிக்க தளமான டின்னியான் தீவிற்கு விநியோகிக்கப்பட்டது; அங்கிருந்துதான் உலகின் முதல் அணு குண்டு போடப்பட்டது.
நான்கு நாட்களுக்கு பிறகு இண்டியானாபொலிஸ் கடலில் மூழ்கியது; மூழ்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதன் உதவியால் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது.
அதே நேரத்தில் அதனுடன் நாகசாகியில் `ஃபேட் மேன்` என்ற அணு குண்டு போடப்பட்டு ஜப்பானியர்களை சரண் அடைய வைத்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப் போரில் மிக முக்கிய பங்கு வகித்த அமெரிக்க கடற்படையின் இண்டியானாபொலிஸ் கப்பலை கண்டுபிடித்து, மூலம் அதன் சிப்பாய்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பெருமை செலுத்துவதை `மிகவும் பணிவாக` உணர்வதாக அலேன் தெரிவித்தார்.
மேலும் பயங்கரமான ஒரு சூழலில் அவர்கள் காட்டிய தைரியம், விடா முயற்சி மற்றும் தியாகம் ஆகியவற்றிற்கு அமெரிக்கர்கள் நன்றிக்கடன்பட்டிருப்பதாக அலேன் தெரிவித்தார்.
இண்டியானாபொலிஸ், அமெரிக்க கடற்படையின் சொத்தாகவே உள்ளது என தேடுதல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அது போர் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படும்.
கப்பல் கண்டுபிடிக்கப்படும் இந்த நாளிற்காக ஒவ்வொருவரும் ஏங்கியதாக, கப்பலிலிருந்து உயிர் பிழைத்தவர்களில் தற்போது உயிரோடுள்ள 22 பேரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் தெரிவித்தார்.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அலெனின் அந்த தேடுதல் கப்பல், 16 பேர் கொண்ட குழுவுடன் கண்டுபிடிப்புகளுக்காகவும், ஆய்வுகளுக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
இதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போரில் பயன்பட்ட ஜப்பானிய போர்கப்பலான முசாஷி மற்றும் இத்தாலி கடற்படை கப்பலான ஆர்டிலிரே ஆகியவற்றின் இடிபாடுகளை கண்டுபிடித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :