உகாண்டாவுக்கு வரும் தெற்கு சூடான் அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
தெற்கு சூடானில் நிலவும் வன்முறை சூழலால் அங்கிருந்து உகாண்டாவுக்கு தப்பிச்செல்லும் அகதிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) அமைப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இது தொடர்பாக உடனடியாக கூடுதல் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், குறைந்தது 10 லட்சம் அகதிகள், சூடான், எத்தியோப்பியா, கென்யா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து நடந்த பல அட்டூழியங்களால் மூண்ட உள்நாட்டுப் போரால், தெற்கு சூடான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், AFP
2013-ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், நாட்டின் துணை அதிபரான ரெய்க் மச்சாரை பதவிநீக்கம் செய்தார்.
மேலும், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரெய்க் மச்சார் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனை, ரெய்க் மச்சார் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர், இவ்விரு தரப்பினருக்கும் ஆதரவான படையினர் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தங்கள் நாட்டுக்கு வருகைபுரியும் அகதிகளை வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் உகாண்டாவின் செயலை ஐ.நா. அமைப்பு மற்றும் மற்ற சர்வதேச நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டில், உலகில் வேறு எந்த நாட்டையும்விட உகாண்டாவுக்கு அதிக அகதிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு
- கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா
- பார்சிலோனா: லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதல்
- காதலரை கொடைக்கானலில் கைப்பிடித்தார் இரோம் ஷர்மிளா
- பாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'
- 13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்
- 'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்?'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












