எப்போதும் இல்லாத ஆபத்தை நோக்கி நகர்கிறது வடகொரியா: சிஐஏ இயக்குநர்

அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்

பட மூலாதாரம், AFP

அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவுடன் உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க அரசின் உளவு நிறுவனத்தின் (சிஐஏ) இயக்குநர் கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தால் `எப்போதும் இல்லாத ஆபத்தை` நோக்கி நகர்வதாக சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்,

வட கொரியா மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தினாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை என ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் `பொறுமை` இனி நீடிக்காது என்றும் வட கொரியாவை அவர் எச்சரித்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், நாட்டின் ஆயுத திட்டத்தை அபிவிருத்தி செய்ய தொடர்ந்து முயற்சிப்பார் என்பதில் தான் `மிகவும் நம்பிக்கையுடன்` இருப்பதாக மைக் கூறுகிறார்.

அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ

அமெரிக்காவைத் தாக்கும் ஒரு அணு ஆயுதத்தை, அமெரிக்காவுக்கு எவ்வளவு நெருக்கமாக வட கொரியாவால் வைக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்கு,`அவர்கள் நெருக்கமாக உள்ளனர்` என தெரிவித்துள்ளார்.

ஆனால், உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

`` எல்லோரும் ஒரு அணு ஆயுதப் போர் பற்றி பேசுவதைப் பற்றி நான் அறிவேன். ஆனால், அணு ஆயுதப் போர் இப்போதே நடக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை கூறவில்லை`` என்கிறார் மைக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :