You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபாய்: 86 மாடிகளை கொண்ட பிரபல டார்ச் டவர் கட்டடத்தில் தீ விபத்து
துபாயில் உள்ள மிகவும் பிரபலமான வானுயர அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தீ விபத்து ஒன்று அதனை கடுமையாக சேதமாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டாவது முறையாக இந்த கட்டடத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், டார்ச் டவர் என்றழைக்கப்படும் கட்டடத்தில் தீ வேகமாக பரவுவதையும், எரிந்து நாசமான இடிபாடுகள் கட்டடத்திலிருந்து கீழே விழுவதையும் காண முடிந்தது.
சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டடத்தில் இருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தியதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகிலேயே மிகவும் உயரமான கட்டடங்களில் ஒன்றாக கருதப்படும் டார்ச் டவர் கட்டடத்தில், தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
''டார்ச் டவர் கட்டட தீ விபத்து சம்பவத்தில் இதுவரை யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை'' என்று துபாய் அரசின் ஊடக அலுவலகம் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளது.
மேலும், சகஜ நிலைக்கு திரும்பும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னர், 2015 ஆம் ஆண்டில் டார்ச் டவர் கட்டடம் தீ விபத்தால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்