'ஆட்டம், பாட்டம் சரி; ஆனால், நிர்வாண நடனம் கூடாது'
`ஆட்டம்,பாட்டத்தோடு கொண்டாடுங்கள். ஆனால் நிர்வாணமாக நடனம் ஆட வேண்டாம்`-இது மத்திய கனடாவில் நடந்த விழா ஒன்றுக்கு வந்தவர்களுக்கு அந்நாட்டு காவல்துறை விடுத்த கட்டுப்பாடாகும்.

பட மூலாதாரம், Photoshot
சஸ்கட்செவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் `தி க்ரவென் கண்ட்ரி தண்டர்` இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குத்தான் கனடா காவல்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், `தங்களை யாரும் கண்காணிக்கவில்லை` என சிலர் எண்ணிக் கொண்டு நடனமாடுவதை எங்களால் பார்க்க முடிகிறது. ஆனால், உண்மை என்னவெனில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மற்றவர்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.` என தெரிவித்துள்ளது.
`இந்த நிகழ்வை மகிழ்ச்சியோடு கொண்டாட நினைக்கும் ஒவ்வொருவரின் ஆசைக்கும் கனடா காவல்துறை ஆதரவாக உள்ளது. நீங்கள் துணிகள் அணிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.`
கடந்த வியாழன்று இந்த நிகழ்ச்சி துவங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஜோடி நிர்வாண புகார்கள் காவல்துறையிடம் வந்துள்ளதாக சிபிசி நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது வரை இந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் இந்த புகாரில் சிக்கியவர்களில் டஜன் கணக்காணோர் சிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் ரெஜினா நகரின் வடக்கு பகுதியில் நடைபெறும் க்ரவென் இசை விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
பிற செய்திகள்:
- ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன?
- டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக கண்டனம்
- மனைவி ஷாப்பிங் செய்யும் வரை காத்திருக்க கணவர் மையங்கள்
- 8-ஆவது விம்பிள்டன் கோப்பையை வென்று ரோஜர் பெடரர் சாதனை
- கதிராமங்கலத்தை காப்பாற்றுங்கள்: ட்விட்டரில் கலக்கிய விஜய் ரசிகர்கள்
- குடிநீர் தட்டுப்பாட்டால், ஓ.பி.எஸ் நிலத்தை வாங்கும் கிராம மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












