You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பேசிக் இன்ஸ்டிங்ட்' நடிகை ஷரோன் ஸ்டோனின் தாராள மனம்
பிரபல பாடகியான மடோனா 1990களில் எழுதிய ஒரு கடித்தத்தில்,பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் 'மிக மோசமான' என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது, அக்கடிதம் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு தன்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று ஷரோன் ஸ்டோன் மறுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், தன்னுடைய திரை வாழ்க்கையை பேசிக் இன்ஸ்டிங்க்ட் நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் தனக்கு பிடிக்கவில்லை என்று மடோனா தெரிவித்திருந்தார்.
அதற்கு ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ள ஷரோன் ஸ்டோன், ''நான் உன்னுடைய தோழி என்பதை தெரிந்துகொள். சில தருணங்களில் நானும் ஒரு ராக் ஸ்டாராக ஆக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதே சமயம் நீ வர்ணித்தபடி நான் மிக மோசமான நபராகவும் இருந்திருக்கிறேன்.''
ஏலத்தில் சென்ற மடோனாவின் சில தனிப்பட்ட கடிதங்கள் பொதுவெளியில் வெளியானது அபத்தமான செயல் என்று ஷரோன் கூறியுள்ளார்.
''நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் நடைபெற்ற கசப்பான விஷயங்களை வைத்து உன்னை தவறாக பேச மாட்டேன்.''
நடிகை ஷரோன் ஸ்டோன் போன்ற திரை வாழ்க்கை தனக்கு கிட்டவில்லை என்பதை படித்தவுடன் தான் விரக்தியடைந்ததாக அந்த கடிதத்தில் மடோனா தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த கடிதம் பொதுவெளியில் கசிந்துள்ள நிலையில் அதற்கு 59 வயதாகும் நடிகை ஷரோன் ஸ்டோன் பதிலளித்துள்ளார்.
'ஜே' என்பவருக்கு கைப்பட எழுதப்பட்டதாக சொல்லப்படும் அந்த கடிதம், ஜான் ஈநோஸ் என்பவருக்கு எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த சமயத்தில், ஜான் ஈநோஸை மடோனா டேட் செய்து கொண்டிருந்தார்.
அந்த கடிதத்தில், தான் தன்னுடைய இயல்பான நிறத்தில் இருப்பது தனக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது என்றும், கருப்பு நிற தோல் இருப்பதால் ஊக்கம் இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
''நான் நினைத்திருந்த இசை வாழ்க்கையை விட்னி ஹூஸ்டன் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும், ஷரோன் ஸ்டோனின் திரை வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதையும் படிக்கும் போது சந்தேகத்துக்கு இடமின்றி எரிச்சலூட்டியது,'' என்று கூறியுள்ளார்.
''அவர்கள் இருவரும் மோசமான கெட்டவர்கள் மற்றும் என்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக என்னை ஒரு தர அளவீடாக வைக்கிறார்கள்.'' என்று அதில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்