“வான்வழி பார்வையில்'' - அபாரமான ட்ரோன் படங்களின் தொகுப்பு
இந்த வருடம் ட்ரோன்ஸ்டாகிராம் என்ற ஆன்லைன் தளத்தால் நடத்தப்பட்ட, வான்வழி புகைப்பட போட்டிகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நேஷனல் ஜியோகிராபிக் துணை இயக்குனர் பேட்ரிக் விட்டி, நேஷனல் ஜியோகிராபிக் பிரான்ஸ் புகைப்பட ஆசிரியர் இமானுலா அஸ்கோலி மற்றும் ட்ரோன்ஸ்டாகிராம் குழு போன்றோர் நீதிபதிகளாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தேடுத்தனர்.
நான்கு பிரிவுகளின் கீழ் வென்ற படங்களை இங்கே ரசிக்கலாம்.
இயற்கை
பட மூலாதாரம், Calin Stan
படக்குறிப்பு, இரண்டாம் பரிசை காளின் ஸ்டான் பெற்றார். ``இந்த சாலை கவுண்ட் ட்ராகுளா பிறந்த இடமான, ஷிகிஸோராவிற்கு ( ருமேனியா) செல்கிறது. அவரது விமானத்தில் இருந்து, தனது நாட்டை பார்ப்பது போல் இருப்பதாக அம்மேதை கூறுகிறார்.`` என்கிறார் ஸ்டான்.
பட மூலாதாரம், J Courtial
படக்குறிப்பு, ப்ரான்ஸில் உள்ள புரோவேன்ஸ் பகுதியில், லாவண்டர் அறுவடையின் போது ஜே கோர்டியால் எடுத்த புகைப்படம் இயற்கை பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. ``பின்னணியில் சூரியன் மறையும் ஓர் அற்புதமான காட்சியை விட, இவ்விடத்திற்கு தகுந்தஓர் உண்மையான படம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலேன்சோல் சென்றேன். அது அறுவடை காலத்தின் தொடக்கம் என எனக்குத் தெரியும், அதனால் டிராக்டர்களை கேமரா மூலம் பின் தொடர்ந்தேன். மேலிருந்து பார்க்கும் போது அருமையான வடிவமைப்பை கொடுக்கும், முறையான வடிவிலான அறுவடையை சிலர் ஆரம்பிக்கும் வரை காத்திருந்தேன்.`` என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Florian
படக்குறிப்பு, கிழக்கு கிரீன்லாந்தில் கடல் பனி உருவாகும் புகைப்படத்தை எடுத்த ப்ளோரேய்ன் முன்றாம் இடத்தை பெற்றார்.
நகரம்
பட மூலாதாரம், Bachirm
படக்குறிப்பு, துபாயின் உயர்ந்த கட்டடங்களை மையமாக வைத்து புகைப்படம் எடுத்த பாக்ஹிர்ம், நகர்புற பிரிவில் சிறந்த புகைப்பட பரிசை வென்றார்.
பட மூலாதாரம், Alexeygo
படக்குறிப்பு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள மெர்குரி சிட்டி டவர் கட்டிடத்தின் கண்ணாடிகளை தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை அலெக்ஸ்யேகோ படம்பிடித்துள்ளார்.
பட மூலாதாரம், Luckydron
படக்குறிப்பு, அமைதி என்ற தலைப்பில் ஸ்பெயினின் மாட்ரிட் மேலிருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்டத்தை லக்கிட்ரோம் எடுத்துள்ளார். நகர பிரிவில் இப்புகைப்படம் முன்றாம் இடத்தை பெற்றது.
மக்கள்
பட மூலாதாரம், Martin Sanchez
படக்குறிப்பு, கோட்டின் முடிவு என்ற தலைப்பு வைக்கப்பட்ட இப்புகைப்படம் மக்கள் பிரிவில் முதலிடத்தை பெற்றது. இப்புகைப்படத்தை எடுத்த மார்டின் சான்சேஸ்,`` நீங்கள் ஒரு புதிய உலக கண்ணோட்டத்தை சுற்றி நடக்கும் போது, மேலே என்ன இருக்கிறது கீழே என்ன இருக்கிறது என்பதை மறந்துவிடுவீர்கள்`` என்றார்.
பட மூலாதாரம், helios1412
படக்குறிப்பு, வியட்நாமில் உள்ள மீகாங் டெல்டாவில் உள்ள ஒரு குளத்தில், அல்லிப் பூக்களை பறிக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஹெலிஓஸ்1412 எடுத்துள்ளர். இப்புகைப்படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
பட மூலாதாரம், feelingmovie
படக்குறிப்பு, ஸ்பெயினின் சிலியோவில் நடந்த `லா விஜனேரா` என்ற குளிர்கால முகமூடி திருவிழா நிகழ்வினை படம் பிடித்த பீலீங்மூவி மூன்றம் இடம் பெற்றார்.
படைப்பாற்றல்
ட்ரோன்ஸ்டாகிராம் சமூகத்தின் படைப்பாற்றலை அடையாளம் கண்டுகொள்ள சிறப்பு வகை இந்த ஆண்டு இருந்தது.
பட மூலாதாரம், LukeMaximoBell
படக்குறிப்பு, லூக்கா மாக்சிமோ பெல்லின் இப்புகைப்படத்தில், இரண்டு மாடுகள் காலை நேரத்தில் தண்ணீர் குடிக்கின்றது. மாட்டின் நிழல் தண்ணீரில் தெரிகின்றன.
பட மூலாதாரம், macareuxprod
படக்குறிப்பு, ``நானும் என் காதலியும் விரைவில் பெற்றோர்களாகப் போகிறோம். இதனை எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு தெரிவித்த இப்புகைப்படம் ஒரு வேடிக்கையான மற்றும் நேரடி வழியாக இருக்கும். பள்ளி வீடியோ கேம்ஸ் ஆர்வம் காரணமாக இப்புகைப்பட எடுக்க உந்தப்பட்டேன்`` என்கிறார் மேக்ரேக்ஸ் புரொடக்சன்ஸின் திபோட் பேகூ.
பட மூலாதாரம், Rga
படக்குறிப்பு, மணல் பகுதியில் எடுக்கப்பட்ட மற்றொரு படம் படைப்பாற்றல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. திறந்த கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் சிரமத்தை ர்காவின் புகைப்படம் காட்டுகிறது.