காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானியின் நினைவஞ்சலி கூட்டத்தில் வன்முறை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் தீவிரவாத தலைவர் ஒருவரின் முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது மோதல் வெடித்தது.
கற்களை வீசி தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலடி தரும் விதமாக பாதுகாப்பு படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
கடந்தாண்டு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாத தலைவர் புர்ஹான் வானியின் வீட்டிற்கு பாதுகாப்பு வலையத்தை உடைத்துக் கொண்டு பொதுமக்கள் முன்னேற முயற்சித்ததை அடுத்து வன்முறை தொடங்கியது.
அவருடைய மரணம் பல கட்ட போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அதில் மட்டும் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நினைவஞ்சலியை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணையதள வசதி துண்டிப்பு மற்றும் புர்ஹான் வானியின் சொந்த கிராமத்திற்கு செல்ல தடை உள்பட கடும் கட்டுப்பாடுகளை இந்திய அதிகாரிகள் விதித்திருந்தனர்.
இரவில் நிகழ்ந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












