ஜி20 மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் இருக்கையில் இவாங்கா டிரம்ப்
வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை, ஜி20 உச்சி மாநாட்டில் தனது தந்தை டொனால்டின் இருக்கையில் சில நிமிடங்கள் இவாங்கா டிரம்ப் அமர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஜி20 கூட்டத்தின்போது, அமெரிக்க அதிபர், இந்தோனேஷிய அதிபருடனான சந்திப்புக்காக வெளியே சென்றிருந்தார்.
அதிபர் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக அவரது மகள் இவாங்கா டிரம்ப் உள்ளார். ஆனால், ஜி20 உச்சி மாநாட்டில் நாட்டின் அதிபர் இல்லாதபோது, அவருக்கு பதிலாக உயர் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக இருந்துள்ளது.
உச்சி மாநாட்டில் இருந்து பிபிசி செய்தியாளர் கூறுகையில், ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் இவாங்கா நின்றது போல இதற்கு முன்பு வேறு நிகழ்வுகள் நடந்ததாக நினைவுபடுத்த முடியவில்லை என்றார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, உச்சி மாநாட்டிற்கு வந்த அதிபர் டிரம்பர், பிரிட்டன் பிரதமருக்கும் சீன அதிபருக்கும் இடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
தனது தந்தை இல்லாத வேளையில் நடைபெற்ற ஆப்பிரிக்க குடியேற்றம் மற்றும் சுகாதாரம் தொடர்பான கூட்டத்தில், இவங்கா டிரம்ப் எந்தவொரு முக்கிய பங்களிப்பபையும் வழங்கவில்லை என்றே தெரிகிறது.
இவங்கா இடம்பெற்ற படத்தை, நிகழ்வில் இருந்த ரஷிய பங்கேற்பாளர் டுவிட்டரில் பதிவிட்ட பிறகு, சமூக ஊடகத்தில் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பட மூலாதாரம், copyright Twitter/@LanaLukash
டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் சிலர் இவங்கா டிரம்ப், தேர்தெடுக்கப்படாத நபர் அல்லது மூத்த ராஜ்ஜிய தலைவர்கள் கூட்டத்தில், ஆயத்த ஆடைகளின் உரிமையாளராக அவர் அமர்ந்தாரா போன்ற அவரது நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இரு வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியின்போது அரசியலில் இருந்து விலகி இருக்க முயற்சிப்பதாக இவாங்கா கூறியிருந்த நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மத்தியில் தோன்றியதாக வேறு சிலர் அவரை வசைபாடினர்.
ஜி20 உச்சி மாநாட்டில் சனிக்கிழமை முன்னதாக நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மற்றும் நிதி தொடர்பான நிகழ்வில், ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோருடன் கலந்து கொண்ட தனது தந்தையுடன் இவங்கா டிரம்ப் சென்றார்.
அனைத்து மூன்று பெண்களும் ஏற்கனவே பெர்லினில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஜி20 மகளிர் உச்சி மாநாட்டில் ஒன்றாகத் தோன்றினர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, குடும்பத்தை ஆதரித்துச் செழிக்க வைக்கக் கூடிய மிகச் சிறந்த சாம்பியனாக தனது தந்தை உள்ளதாக இவாங்கா டிரம்ப் கூறினார்.
முன்னதாக சனிக்கிழமை பேசிய டொனால்ட் டிரம்ப், இவாங்கா வாழ்வில் தன்னைத் தந்தையாகக் கொண்டது மட்டுமே "தவறான ஒன்று" என்று கூறினார்.
"எனது மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவாங்கா ஆரம்ப நாள் முதல் எனக்காகவே இருந்துள்ளார்" என்று மகளிர் தொழில் முனைவோருக்கான குழுவில் இடம்பெற்ற உலகத் தலைவர்களிடம் டிரம்ப் குறிப்பிட்டார்.

"எனது மகளாக இவாங்கா இல்லாவிட்டால், அவர் சிறப்படைய மேலும் எளிதாகியிருக்கும். உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், அது ஒன்றுதான் அவர் அனுபவிக்கும் தவறு" என்று டிரம்ப் கூறினார்.
இவாங்காவின் உடன்பிறந்தவர்களான ஜுனியர் டொனால்ட் மற்றும் எரிக் ஆகியோர் குடும்ப தொழிலை ஏற்றுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் சம்பளம் இல்லாத பொறுப்பை ஏற்பதற்காக, தனக்கு சொந்தமான ஆயத்த ஆடை ரக நிறுவனத்தை அறக்கட்டளையாக மாற்றிய இவாங்காவின் செயல் பாரபட்சமானது என்று விமர்சிக்கப்பட்டது.
பருவ வயதில் சில காலம் மாடலிங் தொழிலில் ஈடுபட்ட இவாங்காவுக்கு, தனது தந்தையின் நிறுவனத்திலேயே வேலை வழங்கப்பட்டது.
அங்கு டிரம்பின் ஹோட்டலை விரிவாக்கம் செய்து தனது உடன்பிறந்தவர்கள் வழியில் வளர்ச்சிப்பிரிவு செயல் துணைத் தலைவராக இவாங்கா ஆனார்.
ஜரெட் குஷ்னரை திருமணம் செய்துள்ள இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகையில் செல்வாக்கு மிக்க பணியையும் ஆற்றி வருகிறார்.
பிற செய்திகள்
- காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானியின் நினைவஞ்சலி கூட்டத்தில் வன்முறை
- வாய்வழி பாலுறவால் பரவும் மிக ஆபத்தான நோய் தொற்று
- பொய்ச் செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி?
- ஜாரவா பழங்குடியினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம் இந்தியா கோரிக்கை
- ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்
- கருத்தடை அறுவை சிகிச்சை: தேவையா இந்த வேறுபாடு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












