You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் தோலை தைத்துக் கொள்ளும் புதிய ஃபேஷன்; இணையத்தில் பரவும் விபரீதம்
சீனாவில் தங்களுடைய தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போடும் ஒரு புதிய போக்கு இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சீன ஊடகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
சமீப வாரங்களாக சீனாவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில், தங்களுடைய தோலிற்குள் போடப்பட்ட தையல் வடிவங்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட ஜப்பானிய கேலி சித்திரத்திலிருந்து இந்த போக்கு ஈர்க்கப்பட்டதாக தோன்றுகிறது. மேலும், இது சர்ச்சைக்குரிய விளையாட்டான ''ப்ளூ வேல்'' என்ற சுயமாக காயம் ஏற்படுத்தி கொள்ளும் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் விளையாட்டு நிர்ணயித்திருந்த போக்கை தற்போது இந்த புதிய போக்கும் பெற்றுள்ளது.
இதுபோன்று சுயமாக தீங்கிழைத்து கொள்ளும் முறை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றில் முடியும் என்றும், இறுதியாக செப்டிசீமியா என்ற ரத்தத்தில் அதிகளவில் நச்சு கலப்பு ஏற்படும் என்றும் ஊடகங்கள் எச்சரித்துள்ளன.
'ரகசியமாக பரவுகிறது'
தோலிற்குள் வடிவங்களை தைத்து கொள்வது இளம் வயதினரிடையே மிகவும் ரகசியமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ள பீப்பிள்'ஸ் டெய்லி, அதன் சினா வெய்போ பக்கத்தில் பயன்பாட்டாளர்கள் பதிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
பல புகைப்படங்களில், இந்த அபாயகரமான விளையாட்டில் கலந்து கொண்டவர்கள், தங்களுடைய கைகள், கால்கள் ஏன் உதடுகளில் கூட வண்ண நூல்களை கொண்டு தோலிற்கு குறிப்பிட்ட வடிவங்களை தைத்துள்ளனர். சிலர், அலங்காரத்திற்காக அந்த தையல்களில் குண்டுமணிகளை மாட்டியும், ரிப்பன்களை சேர்த்தும் தைத்துள்ளனர்.
இந்த மாதிரியான புகைப்படங்களை பார்த்து பல்லாயிரக்கணக்கான சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் இதுபோன்று தையல்களை தோலில் போட்டுக் கொண்டவர்களை பைத்தியம் என்றும், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இவை என்றும் திட்டித் தீர்த்துள்ளனர்.
எதற்காக?
டோக்கியோ கோல் என்ற ஜப்பானிய காமிக் பாத்திரத்தை கொண்டு சீனாவில் இது பிரபலப்படுத்தப்படுவது போல உணர்வதாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், சீன பெரு நிலப்பரப்பில் டோக்கியோ கோல் அதிகாரபூர்வமாக தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்று தடைவிதிக்கப்பட்ட காமிக்குகள் நாட்டின் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.
சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியில் வரும் ஜூஷூ சுஸுயா என்ற கதாபாத்திரத்தை போன்று தோன்ற வேண்டும் என்பதற்காக தனது உதடு, காலர் எலும்பு மற்றும் கை ஆகிய பகுதிகளில் தோலிற்குள் தையல்களை போட்டுள்ளார் அப்பெண்.
சீனாவில் கடந்த இரு மாதங்களாக அதிகமாக பிரபலமாகிவரும் ''ப்ளூ வேல்'' என்ற சர்ச்சைக்குரிய இணையதள விளையாட்டில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் காணப்படும் எழுச்சி குறித்தும் நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
கடந்த மே மாதம், China.cn என்ற அதிகாரப்பூர்வ தளத்தில், சீனாவின் முன்னணி தேடுதல் தளமான பாய்டு தளத்தில் ''ப்ளூ வேல்'' மற்றும் அதன் தொடர்புடைய சொற்களை இணைய பயன்பாட்டாளர்கள் அதிகளவில் தேடி உள்ளதாக கூறியுள்ளது.
சுயவதையை ஊக்குவிப்பதாக நம்பப்படும் இணைய அரட்டைக்குழுக்கள் மற்றும் விவாத தளங்களை கண்டறிந்து அதுகுறித்த செய்திகளை பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
பிற செய்திகள் :
- மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்
- பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்
- முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்
- கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை
- `கர்ப்பமடையும் மாணவிகள் மீண்டும் பள்ளியில் அனுமதியில்லை'
- ஃபுகுஷிமா அணு உலைக்குள் நீந்திச் செல்லும் “சிறிய சூரியமீன்” ரோபோ
- திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்