இரானை அடுத்து கத்தாருக்கு உணவு பொருட்களை அனுப்பியது மொராக்கோ
வளைகுடா நாடுகள் விதித்துள்ள பயணத் தடையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கத்தாருக்கு, ஒரு விமானத்தில் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளதாக மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், PA
இந்த நடவடிக்கை மனிதாபிமான அடைப்படையில் செய்யப்பட்டது என்றும் கத்தாருக்கு பயங்கரவாதத்துடன் இருப்பதாக கூறப்படும் தொடர்புகள் குறித்த அரசியல் சரச்சையுடன் இது தொடர்பில்லாதது என்று மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக மொரோக்கோவின் மன்னர் ஆறாம் முகம்மது, இந்த இரண்டு தரப்பினர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் .கடந்த வாரம் மொரோக்கோவில் இருந்து தோஹாவிற்கு செல்லவும் திரும்பவும் இயக்கப்படும் விமான சேவைகளை மொரோக்கோ தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












