சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க கப்பலால் பரபரப்பு
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவால் கட்டப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகே அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று பயணித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சீனாவின் தென் சீனக் கடல் பகுதிக்கு உரிமை கோரலுக்கு அமெரிக்க தரப்பிலிருந்து சவால் விடும் வகையில் நடந்த முதல் சம்பவம் இதுவாகும்
பெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஊடகங்கள், தென் சீனக் கடலின் ஸ்பார்லி தீவுகளில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் என்ற பாறைப் பகுதிக்கு 12 கடல் மைல்தொலைவுக்கு அப்பால் அமெரிக்க போர்க் கப்பல் பயணித்ததாக தெரிவித்துள்ளன.
கடல் பாறைகள் மற்றும் தீவுகள் உள்பட ஒட்டுமொத்த தென் சீனக்கடல் பகுதிக்கும் சீனா உரிமை கோரியுள்ள சூழலில், இவற்றுக்கு வேறு சில நாடுகளும் உரிமை கோருகின்றன.
உலகின் எந்த சர்வதேச கடல் பகுதியில் தனது நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பட மூலாதாரம், Reuters
தென் சீனக் கடல் பகுதியை ராணுவ மயமாக்கி வருவதாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியினால் உலகளாவிய ரீதியில் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற கவலைகள் உண்டாகியுள்ளன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












