எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை வீழ்ந்தது

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி முனை சேதமாகியுள்ளது. இதன் காரணத்தால் உலகிலேயே மிக உயரமான மலை இனிவரும் காலங்களில் மலை ஏறுபவர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறலாம்.

2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்திலிருந்த ஹிலாரி முனை சேதமடைந்திருக்கலாம் என்று மலை ஏறுபவர்கள் கூறுகின்றனர்.

மலையில் தென்கிழக்கு முனையில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு பாறைகள் உடைய பகுதியாக இது இருந்தது.

மலையின் உச்சியை அடைவதற்கு இந்தப் பகுதிதான் இறுதி பெரும் சவலாக இருந்துவந்தது.

1953 ஆம் ஆண்டில் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இந்த பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஹிலாரி முனை அழிந்துவிட்ட செய்தியை பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீரரும் மற்றும் பயணத்தலைவருமான டிம் மோஸ்டேல் மே 16 ஆம் தேதி மலை உச்சியை அடைந்த பிறகு உறுதிப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில்,''ஹிலாரி ஸ்டெப் இனி இல்லை, அது அழிந்துவிட்டது'' என்று பதிவிட்டிருந்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்