இரான் தேர்தல் நிலவரம்: ஹாசன் ரூஹானி முன்னணி
இரானில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஹாசன் ரூஹானி, அவரது பழமைவாத போட்டியாளரான எப்ராகிம் ரைசியை காட்டிலும் முன்னணி வகிக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தாலும், வாக்கெடுப்பில் முறைகேடுகள் உள்ளதாக ரைசி புகார் அளித்துள்ளார் என்று இரானிய அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், AFP
தற்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ரூஹானிக்கு பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளும், ரைசிக்கு பத்து மில்லியன் வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70% ஆகும் என உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரூஹானி, சர்வதேச தொடர்புகளை அதிகரித்திருந்தாலும், அவரது ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் குறைந்த அளவில் மட்டுமே இருந்தது.
இரானின் அதி உயர் அதிகாரம் கொண்ட தலைவர் அயத்தொல்லா காமெனிக்கு நெருக்கமான ரைசி, இரானின் பொருளாதாரம் தவறான நிர்வகிக்கப்படுகிறது என்றும் அயல்நாடுகளின் செல்வாக்கு இரானில் அதிகரிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












