தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங்
பிரான்சின் புதிய அதிபர் இமான்வெல் மக்ரோங், தனது புதிய அரசியல் இயக்கத்திலிருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தாமல், மத்திய-வலதுசாரி அரசியல்வாதியின் பெயரை அறிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், EPA
தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட, வடமேற்கு துறைமுகமான லே ஹேவ்ரேயின் மேயரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்டு பிலிப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்ரோங், சில காலத்திற்கு முன்பு தொடங்கிய "லா ரிபப்ளிக் என் மார்சே" கட்சிக்கு, பிற குடியரசு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாக்களிக்க இந்த முடிவு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோங்கின் புதிய கட்சி, சிறப்பான வெற்றி பெறவேண்டும்.
தற்போது, ஜெர்மன் சான்சிலர் ஆங்கெலா மெர்கலை சந்திக்க இமான்வேல் மக்ரோங் பெர்லினுக்கு செல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












