You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்
டென்மார்க்கை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம் பிஸ்னர் என்ற புது ரக பீரை தயாரித்துள்ளது. இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டது.
மது தயாரிப்பு நிறுவனமான நோர்ப்ரோ, இந்த பீரில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளிக்கிறது.
பிஸ்னர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது.
வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெர்ற பிரமாண்டமான இசை திருவிழாவில் இருந்து மனிதர்களின் சிறுநீர் சேகரிக்கப்பட்டது.
''இதுபோன்ற பீரை நாங்கள் தயாரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது, அதில் நேரடியாக சிறுநீர் கலந்துவிடுவோம் என்று அனைவரும் நினைத்தனர். இதனைக் கேட்டதும் நாங்கள் அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தோம் என்று நோரேப்ரோவின் தலைமை இயக்குனர் ஹென்ரிக் வாங் கூறுகிறார்.
மனிதக்கழிவுகளை உரமாக பயன்படுத்துவது ஒரு புதிய உத்தி என்று டென்மார்கின் வேளாண்மை மற்றும் உணவு கவுன்சில் கூறுகிறது. பீரில் இனி சிறப்பாக, நிலைத்திருக்கக்கூடிய வகையில் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவாக பிஸ்னர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியை ''பீர் சைக்ளிங்'' என்றும் சொல்கிறோம். 2015 ஆண்டு நடைபெற்ற ரோசிக்ளே இசைத் திருவிழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரெஷ் ஸ்ஜோக்ரென், ''இந்த புது ரக பீரை நான் சுவைத்தேன். ஆனால் அதில் சிறுநீரின் சுவை சிறிது கூட இல்லை'' என்று தெரிவித்தார்.
50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து, அறுபதாயிரம் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிறுநீர் பீர் தயாரிக்கும் வழிமுறைகளில் பயன்படுத்துவதற்கு இயந்திரம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுநீரை குடிநீராகவும், உரமாகவும் மாற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக பெல்ஜிய பல்கலைக்கழகத்தின் ஒரு குழு கடந்த ஆண்டே கூறியது. இந்த தொழில்நுட்பத்தை கிராமப்புற பகுதிகளிலும், வளரும் நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பிற முக்கிய செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்