You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் பயணத்தடை மீதான தடை காலவரையின்றி நீடிப்பு
அமெரிக்க அதிபரின் பயணத் தடைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஹவாய் மாநிலத்தில் உள்ள மத்திய நீதிபதி, காலவரையின்றி நீடித்துள்ளார்.
இந்த உத்தரவின் மூலம், 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு டிரம்ப் விதித்து புதிய பயணத் தடை உத்தரவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை, அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது.
அதிபரின் புதிய பயணத் தடை உத்தரவு, முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் தங்கள் மாநில பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்றும் ஹவாய் மாநில அட்டார்னி ஜெனரல், நீதிமன்றத்தில் வாதிட்டார்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக, அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக, அமெரிக்க நீதித்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்