You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வலைதள அந்தரங்க உரிமை விதிகளை அகற்றுவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் அவை வாக்களிப்பு
முந்தைய ஒபாமா நிர்வாகத்தினால் கொண்டு வரப்பட்ட வலைதள அந்தரங்க உரிமை விதிகளை அகற்றுவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் அவை வாக்களித்துள்ளது.
இன்னமும் நடைமுறைக்கு வராத இந்த விதிமுறைகள், வாடிக்கையாளர்களின் வலைதள உலாவல் தகவல்கள் போன்ற தரவுகள் சேகரிப்பு மற்றும் பகிர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு, வலைத்தள சேவை அளிப்போர், தங்களின் வாடிக்கையாளர்களின் அனுமதியை பெற வேண்டும் என்ற விதியை காட்டாயமாக கொண்டிருந்தது.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இத்தரவுகளை சேகரிப்பதற்கு எந்த தடையும் இல்லாத சூழலில், அகலக்கற்றை இணைப்பு என்றழைக்கப்படும் பிராட்பேண்ட் அலைவரிசை சேவை வழங்குபவர்கள் மீது மட்டும் இந்த விதிகள் பாரபட்சம் காட்டுவதாக இந்த விதிகளை எதிர்ப்பவர்கள் வாதிட்டனர்.
ஆனால், வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க வேண்டும் என பிரச்சாரம் செய்பவர்கள் , இந்த விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வலைதளத்தில் மேற்கொள்ளும் ஓவ்வொரு நடவடிக்கையையும் வலைத்தள சேவை அளிப்போர் பணமாக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்