புதிய சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு: அதிபர் டிரம்புக்கு பின்னடைவு?
அமெரிக்க பிரதிநிதி சபையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சுகாதார மசோதா மீது நடக்கவிருந்த வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்கள் கட்டுரைகளை படிக்க: உள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்!

நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடக்கவுள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெற தேவையான எண்ணிக்கை இருப்பதால் தான் வெற்றி அடைய முடியும் என்று வியாழக்கிழமையன்று இது குறித்து வலியுறுத்திய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
முந்தைய அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒபாமா கேர் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவரான கெவின் மெக்கார்த்தி இது குறித்து கூறுகையில், அவை வாக்கெடுப்பு நடத்த வெள்ளிக்கிழமை தான் திட்டமிடப்பட்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சந்திப்பர் என்று தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












